- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

நீங்களும் நொடி பொழுதில் அழகு தேவதையாக மாறலாம். ஆவாரம் பூவின் அழகான ரகசியக் குறிப்பு உங்களுக்காக.

- Advertisement -

நாம் பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி முகத்தில் பொலிவு, கலை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். ஏன் தேவதை என்றால் வெள்ளையாகத் தான் இருக்க வேண்டுமா. கருப்பு நிறத்தில் தேவதை இருக்கக்கூடாதா. மாநிரமாக இருந்தாலும், கருப்பு நிறமாக இருந்தாலும் உங்களுடைய முக அழகை ஜொலிக்க வைக்கக்கூடிய ஒரு ரெமிடியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய அழகுக்கு மேலும் அழகு சேர்க்க ஆவாரம்பூவை எப்படி பயன்படுத்துவது. ஆவாரம்பூவை இப்படி பயன்படுத்தினால் உங்களுடைய சருமம் சீக்கிரத்திலேயே தங்க நிறத்திற்கு மாற தொடங்கி விடும். அதன் பின்பு நீங்கள் தேவதையாக ஜொலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

காய்ந்த ஆவாரம் பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி 1/2 மணி நேரம் வெயிலில் வைத்து அதன் பின்பு அதை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆவாரம்பூ சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு உடனடியாக நல்ல தீர்வைக் கொடுக்கும் மூலிகைப் பொருள்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடி செய்து வைத்திருக்கும் ஆவாரம்பூ பொடி – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/4 ஸ்பூன், தேன் –  1 ஸ்பூன், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதை நன்றாக கலந்து கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீராக கலக்க வேண்டாம். திக்கான பேஸ்டாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை முகம் கை கால் உடம்பு முழுவதும் கூட பூசி, 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, அதன் பின்பு நன்றாக ஸ்க்ரப் செய்து குளித்து வந்தால், உங்களுடைய உடல் முழுவதும் தங்கம் போல் தகதகவென ஜொலிக்க ஆரம்பித்துவிடும். இந்த பேக்கை உடம்பில் போட்டுவிட்டு சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது. வாரத்தில் இரண்டு நாட்கள் இதை ட்ரை பண்ணி பாருங்க. ஒரு மாதத்திற்குள் உங்களுடைய சருமத்தில் என்ன வித்தியாசம் தெரியும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

- Advertisement -

சொல்லப்போனால் கோல்டன் ஃபேஷியல் செய்தால் நமக்கு என்ன லுக் கிடைக்குமோ, அதே பளபளப்பு நம்முடைய உடல் முழுவதும் கிடைக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் இதை முகத்தில் மட்டும் கூட அப்ளை செய்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, அதன் பின்பு நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். ஸ்கரப் செய்து ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இன்ஸ்டன்டா முகம் ஜொலி ஜொலிக்கும்.

மேலே குறைந்த அளவில் தான் பொருட்களை நாம் சேர்த்து பேக்கை தயார்செய்து இருக்கின்றோம். உங்களுடைய உடல் முழுவதற்கும் இந்த பேக் தேவை என்றால், அதற்கு ஏற்றாற்போல நீங்கள் எல்லா பொருட்களையும் அதிகமாக சேர்த்து இந்த பேக் தயார் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு அழகா மாற அதிக ஆர்வம் இருந்தால் இந்த அழகுகுறிப்பை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -