- Advertisement -
சமையல் குறிப்புகள்

பாய் வீட்டு பிரியாணி மட்டும் இல்லைங்க, பாய் வீட்டு கல்யாண சோறும் ரொம்ப சூப்பரா இருக்கும். இதுவரைக்கும் சாப்பிடாதவங்க உடனே செய்ஞ்சு சாப்பிடுங்க

- Advertisement -

பிரியாணி எப்படி பாய் வீட்டில் செய்வது பிரபலமான உணவாக உள்ளததோ, அதே போல் இந்த பாய் வீட்டு கல்யாண சோறும் பேமஸ் தான். அவர்களின் கல்யாணங்களில் பெரும்பாலும் இந்த உணவும் கட்டாயமாக இடம் பெறும். தேங்காய்ப்பால் நெய் கொண்டு செய்யப்படும் இந்த சாதம் பிரியாணி போலவே அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சாதத்தை நாம் எப்படி வீட்டில் சுலபமாக செய்வது என்பதை தான் இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 2 கப், வெங்காயம் – 2, தக்காளி – 1 சிறிய அளவு, இஞ்சி பூண்டு விழுது – 1டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, நெய் – 4டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் – 1/2 மூடி, பட்டை -2,கிராம்பு -2, ஏலக்காய் – 2,உப்பு -1/4 டீஸ்பூன், கொத்தமல்லி புதினா – 1 கைப்பிடி, தயிர் – 1/4 கப்.

- Advertisement -

இந்த சாதம் செய்வதற்கு முன்பு அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் அரை மூடி தேங்காயும் அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பைப் பற்றி வைத்து குக்கர் வைத்து சூடானவுடன் அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவுக்கு நெய்யை ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து காய்ந்தவுடன் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சேர்த்த பிறகு வெங்காயத்தை நல்ல நீளமாக நறுக்கி சேர்த்துக் கொள்ள கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை கண்ணாடி பதமாக வதங்கினாலே போதும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்த பிறகு அதுவும் நன்றாக வதங்க வேண்டும். அதன் பிறகு காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்த்து தயிரும் சேர்த்த பின் புதினா கொத்தமல்லி தழைகளையும் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். பிரியாணிக்கு சேர்ப்பதை போல் அதிக மசாலாக்கள் இதில் சேர்க்க வேண்டியது இல்லை. இவையெல்லாம் லேசாக வதங்கிய பிறகு இத்துடன் ஊற வைத்து வடிகட்டி எடுத்த பிரியாணி அரிசையும் சேர்த்து ஒரு முறை கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரைத்த தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் பால் இரண்டு கப் அரிசிக்கு மூன்று கப் அளவிற்கு தேங்காய் பால் இதில் சேர்த்த பிறகு உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விடுங்கள். சாதம் ஒரு கொதி வந்தவுடன் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி குக்கரை மூடி வைத்து விட வேண்டியது தான்.

குக்கர் இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு விசில் இறங்கியவுடன் சாதத்தைநன்றாக ஒரு முறை கலந்து எடுத்து கொள்ளுங்கள். இதற்கு காரசாரமாக என்ன சைடிஷ் வைத்தாலும் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு மத்திய உணவாக இதை குடுத்து அனுப்பினால் ஒரு பருக்கை கூட வீட்டுக்கு வராது.

- Advertisement -