
நம் வீட்டு பாத்ரூமையை எவ்வளவு தான் சுத்தமாக பராமரித்து வந்தாலும் கூட , அதில் கறைகள் படிவதை நம்மால் தடுக்கவே முடியாது. ஏனென்றால் இப்போது இருக்கும் தண்ணீர் அப்படி, பெரும்பாலும் அனைத்து இடத்திலும் உப்புத் தண்ணீர் தான் கிடைக்கிறதே தவிர நல்ல தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இல்லை. இதனால் நீங்கள் தினமும் சுத்தம் செய்து கொண்டே இருந்தால் கூட, ஆங்காங்கே உப்பு கறை பிடித்து சுவர் பீங்கான் எல்லாம் அழுக்கு படிந்து விடுவதை நம்மால் தடுக்க முடியாது. இதை போட்டு தேய்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கும். இனி அத்தனை கஷ்டம் இல்லாமல் நொடியில் சுத்தம் செய்ய ஒரு அருமையான டிப்ஸ். அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நீங்கள் எத்தனை வருடம் பயன்படுத்தாமல் போட்டு வைத்த கறை படிந்த பாத்ரூமாக இருந்தாலும் சரி இதை போட்ட பத்து நிமிடத்திற்கு எல்லாம் பளிச்சென்று மாறி விடும். அந்தளவுக்கு பலனளிக்கக்கூடிய குறிப்பு.
இதை செய்வதற்கு நமக்கு தேவை துணி துவைக்கும் சோப்பு. இந்த சோப்பை ஒரு கால் பாகம் எடுத்து நன்றாக தூள் செய்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சம் கல் உப்பு அதன் பிறகு நாம் வீடு, தரை துடைக்க பயன்படுத்தும் லைசால் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சேர்த்தால் போதும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முதலில் அனைத்தும் கரையும் படி கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை எடுத்து உங்கள் வீட்டு பாத்ரூமில் பீங்கான், தரை போன்றவற்றில் நன்றாக தெளித்து அனைத்து இடங்களும் படும்படி லேசாக தேய்த்து விட்டு பத்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அதன் பிறகு நீங்கள் பாத்ரூம் தேய்க்கும் பிரஷ் வைத்து தேய்த்து தண்ணீர் ஊற்றினாலே சுத்தம் செய்தலே போதும், உங்கள் பாத்ரூம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பளிச்சென்று மாறிவிடும்.
அதே போல் பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்து உள்ள உப்பு கறையை நீங்கள் நாளெல்லாம் தேய்த்தாலும் கூட மறையாது அதற்கு உங்கள் வீட்டில் உப்பு காகிதம் இருந்தால் அதை வைத்து லேசாக தேய்த்து விட்டால் போதும் கறை மறைந்து விடும்.
பாத்ரூம் எப்பொழுதும் வாடை இல்லாமல் இருக்க கொஞ்சம் நாத்தலின் பால்சை தூள் செய்து தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். இதை உங்கள் வீட்டு சமையலறை சிங்கில் தெளித்தால் இந்த வாடைக்கு கரப்பான் பூச்சி வராது. அது மட்டும் இன்றி வாசனையாகவும் இருக்கும். இதை பாத்ரூமில் தொடர்ந்து பயன்படுத்தும் போது அங்கும் எந்தவித கெட்ட வாடையும் விசாது.
இந்த குறிப்புகள் அனைத்தும் உங்கள் வீட்டு பாத்ரூம் எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க,மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.