- Advertisement -

வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க சிறந்த நாட்கள்

வேலைக்கு செல்பவர்களும் வீட்டில் இருப்பவர்களும் ஏன் சிறு குழந்தைகளுக்கு கூட வங்கி கணக்கு என்ற ஒன்று இருக்கிறது. தங்கள் கையில் பணம் இருந்தால் அதை எதற்காகவது செலவு செய்து விடுவோம். இதுவே வங்கிக் கணக்கில் போட்டு வைத்தால் அது அப்படியே இருக்கும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வட்டி வரும் என்றெல்லாம் நினைத்து வங்கி கணக்கில் பணத்தை போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

யாராக இருந்தாலும் பணத்தை சேர்த்து வைப்பதற்காகத்தானே வங்கி கணக்கு ஆரம்பிக்கிறோம். அப்படி அந்த வங்கி கணக்கில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதை எந்த நாளில் ஆரம்பிக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க சிறந்த நாட்கள்

அன்றைய காலத்தில் உண்டியல் இருக்கும். அதில் தங்களிடம் இருக்கக்கூடிய பணத்தையோ காசுகளையும் போட்டுக் கொண்டே வருவார்கள். உண்டியல் எப்பொழுது நிறைகிறதோ அப்பொழுது அதை உடைத்து அதில் இருக்கக்கூடிய பணத்தை எடுத்து ஏதாவது ஒரு காரியத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள். இன்றைய காலத்தில் உண்டியல் என்பதே இல்லாமல் போய்விட்டது.

சிறு குழந்தைகளுக்கு கூட வங்கி கணக்கு ஆரம்பித்து அவர்களின் பெயரில் மாதமாதம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டு வைத்தால் பிற்காலத்தில் அவர்களுக்கு உதவியாகும் என்று பெற்றோர்கள் பலர் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது ஒன்றும் தவறு இல்லையே. ஆனால் இதை எத்தனை பேர் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி.

- Advertisement -

ஆசை ஆசையாக வங்கி கணக்கை ஆரம்பிப்போம். ஆனால் மேற்கொண்டு அதில் எந்தவித பணத்தையும் போடாமல் அது அப்படியே காலாவதி ஆகிவிடும். இதற்கு காரணம் அந்த வங்கிக் கணக்கில் பணம் போடாதது தான். ஏன் போடவில்லை. கையில் வருமானம் இல்லை. இப்படித்தான் சொல்வார்கள்.

ஒரு செயலை நாம் செய்வதாக இருந்தால் அந்த செயலுக்குரிய நேரத்தையும் நாளையும் பார்த்து தான் செய்ய வேண்டும். எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கும் நாம் இந்த யுக்தியை பயன்படுத்துவோம். வங்கியில் கணக்கு ஆரம்பிப்பதும் ஒரு நல்ல காரியம் தானே. அப்படி இருக்கும் பொழுது நமக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது போய் வாங்கி கணக்கை திறக்கலாம் என்று நினைத்தால் அது எப்படி பணம் சேரும்.

- Advertisement -

அதில் பணம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாட்களில் சென்று வங்கி கணக்கை தொடங்கி பாருங்கள். இந்த நாட்களின் வரிசையில் மூன்று நட்சத்திரங்கள் வருகின்றன. அவை அனுஷம், பூரட்டாதி மற்றும் மகம் இந்த மூன்று நட்சத்திரம் வரும் நாட்களில் சென்று நாம் வங்கிக் கணக்க ஆரம்பிக்கலாம் இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் அன்றைய தினத்தில் காலண்டரில் மேல் நோக்கு நாள் என்று போட்டிருக்க வேண்டும்.

சமநோக்கு நாளோ அல்லது கீழ்நோக்கு நாளோ இருந்தால் தொடங்கக்கூடாது. மேல்நோக்கு நாள் இருந்தால் தான் அது மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே செல்லும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று அர்த்தம். அதனால் மேல் நோக்கு நாள் வரும் நாளாக பார்த்து வங்கி கணக்கை ஆரம்பித்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று நட்சத்திரங்களை விட ஒரு திதி மிகவும் விசேஷமான திதியாக கருதப்படுகிறது.

அதுதான் அஷ்டமி திதி. அஷ்டமி என்றதும் நமக்கு கால பைரவர் தானே ஞாபகத்திற்கு வருவார். அவரை வணங்கிதான் அஷ்ட லட்சுமிகளும் செல்வங்களை பெற்றார்களாம். அதனால் அஷ்டமி தினத்தன்று நாம் வங்கி கணக்கு தொடங்கினோம் என்றால் நமக்கு பணமானது ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

இந்த நாட்களை பயன்படுத்தி வங்கிக் கணக்கை ஆரம்பித்து சேமிப்பை உயர்த்திக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -