- Advertisement -
- Advertisement -

நம்முடைய சருமம் பல ஆயிரக்கணக்கான செல்களால் உருவாக பட்டது. அந்த செல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உயிருடன் இருந்து பிறகு இறந்துவிடும். இறந்த இந்த செல்களை நாம் முறையாக நீக்காவிட்டால் அது அப்படியே நம்முடைய சருமத்தின் மேல் படர்ந்து ஒருவித கருமை நிறத்தை உண்டாக்கி விடும். அதனால் தான் அழகு நிலையங்களில் முதலில் முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்து செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். அப்படி இறந்த செல்கள் நீங்கிய பிறகு நாம் செய்யக்கூடிய எந்த ஒரு அழகு தொடர்பான வழிமுறையாக இருந்தாலும் அதற்கு நல்ல பலன் கிடைக்கும். அப்படி சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்குவதற்கு உதவக்கூடிய ஒரு இயற்கையான ஸ்கிரப்பரை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

இறந்த செல்களை நீக்குவதற்காக அழகு நிலையங்களில் பலவிதமான ஸ்கிரப்பரை பயன்படுத்துவார்கள். அவற்றை பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுவதும் உண்டு. இன்னும் சிலருக்கு அதனால் பக்கவிளைவுகளும் உண்டாகும். இப்படி கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாகவும் அதே சமயம் அழகு நிலையத்திற்கு சென்று அதிகப்படியான செலவுகளை மேற்கொள்ளாமல் வீட்டிலேயே எளிமையான முறையில் ஸ்க்ரப் செய்ய முடியும். இந்த ஸ்க்ரப்பை நம்முடைய முகம், கை, கால், கழுத்து, உதடு போன்ற அனைத்து பகுதிகளும் நாம் உபயோகப்படுத்தலாம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஒருமுறை இதை நாம் தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் போதும் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறந்த செல்களை நீக்க நாம் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த ஸ்கிரப்பரை தயார் செய்வதற்கு நான்கு பொருட்கள் இருந்தால் போதும். இவை நான்குமே ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய அத்தியாவசிய பொருட்கள் தான். முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்க்க வேண்டும். அடுத்ததாக நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய காபித்தூளில் இருந்து கால் ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஸ்க்ரப் தயாராகிவிட்டது.

இதை நம்முடைய சருமத்தில் எங்கு வேண்டுமானாலும் நாம் நன்றாக தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு சருமத்தை கழுவினால் போதும். சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். இப்படி நாம் ஸ்க்ரப்பரை பயன்படுத்திய பிறகு தேங்காய் எண்ணெய், வாசலில் போன்ற ஏதாவது ஒரு பொருளை நம்முடைய சருமத்தில் தடவ வேண்டும். அப்படி தடவுவதன் மூலம் நம்முடைய சருமம் வறண்டு போகாமல் மிருதுவாகவும் மென்மையாகவும் திகழ ஆரம்பிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:எண்ணெய் சருமத்திற்கு உகந்த ஃபேஸ் மாஸ்க்

வீட்டிலேயே எளிமையான முறையில் இப்படி ஸ்க்ரப்பரை தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் நம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தி அந்த இறந்த செல்களை நீக்க முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -