- Advertisement -
பொது பலன்

ஜோதிடம் : புதன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

சிறந்த அறிவாற்றலுக்கும், ஞானத்திற்கும் அதிபதியாகிய புதன் பகவான் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை 4.40 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். புதனின் பெயர்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்பெயர்ச்சியினால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்:

- Advertisement -

மேஷ ராசிக்கு 12 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியடைந்ததால் நோய் மற்றும் கடன் ஏற்படும். பொருளாதார நிலையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படும். உத்தியோகிஸ்தர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கொடுத்த தொகையை வட்டியுடன் திரும்ப பெறுவார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது.

ரிஷபம்:

- Advertisement -

ரிஷப ராசிக்கு 11 ஆம் வீடான மீன ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் நெருங்கிய உறவுகள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும்.வியாபாரங்களில் பெரும் லாபங்கள் ஏதும் இருக்காது. மறைமுக எதிரிகள் உருவாவார்கள். கணவன் மனைவிக்குள்ளாக கருத்து வேறுபாடுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பிறருடனான பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.
மிதுனம்:

மிதுன ராசிக்கு 10 ஆம் வீடான மீன ராசிக்கு உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் இழுப்பரியான நிலை நீடிக்கும். உறவுகளின் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாது. குழந்தைகள் கல்வியில் சிறந்த சாதனைகள் செய்வார்கள். சிலருக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

கடகம்:

கடக ராசிக்கு புதன் 9 ஆம் வீடான மீன ராசிக்கு பெயர்ச்சியாகியிருப்பதால் நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சிகள் சற்று காலதாமதமாகும். அவ்வப்போது சிறு உடல் நல பாதிப்புகள் உண்டாகி மறையும். திருமண வயது கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த முறையில் திருமணங்கள் நடக்கும். வயதில் மூத்தவர்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு புதன் 8 ஆம் வீடான மகர ராசியில் இருப்பதால் வேலை தேடுபவர்கள் வேலை கிடைக்க பெறுவார்கள். தால் குடும்ப பொருளாதார நிலை உயரும்.குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். விவசாய தொழில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள். பயணங்களில் எச்சரிக்கை அவசியம்.

கன்னி:

கன்னி ராசியின் அதிபதியாகிய புதன் இந்த ராசிக்கு 7 ஆம் இடத்தில் அமர்வதால் உடல் நிலை நன்றாக இருக்கும். பொருள்வரவில் எந்த ஒரு பாதிப்புகளும் இருக்காது. பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வழிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்கு 6 வீட்டிற்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதியவர்களுக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகும். கல்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

விருச்சகம்:

விருச்சிக ராசிக்கு 5 ஆம் இடமான மீன ராசியில் புதன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். குழந்தை இல்லாமல் ஏங்கியவர்ளுக்கு குழந்தைகள் பிறக்கும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். அரசியலில் இருப்போர்களுக்கு பதவிகள் கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்கு 4 ஆம் வீடான மீன ராசியில் புதன் பெயர்ச்சியடைவதால் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் எழலாம். பயணங்களால் வீண் பொருள் விரயம் ஏற்படும். வாகனங்களை செலுத்தும் போது எச்சரிக்கை அவசியம். பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். பணவரவு தாராளமாக இருக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.

மகரம்:

மகர ராசிக்கு 3 ஆம் வீடான மீன ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்கு புதன் 2 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் உடலில் அசதியும், மனதில் கவலைகளும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்கள் பல அலைச்சல்களுக்கு பிறகு புதிய வேலை கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும்.

மீனம்:

மீன ராசியிலேயே புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உங்களுக்கு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகத்தில் புதன் கேது சேர்ந்திருந்தால் இத்தனை நன்மைகளா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan peyarchi palangal april 2019 in Tamil. It is also called as Budhan peyarchi palangal in Tamil.

- Advertisement -
Published by