ஜோதிடம் : ஜாதகத்தில் புதன், கேது சேர்ந்திருந்தால் இத்தனை நன்மைகளா?

astro

உலகில் ஒவ்வொரு நொடியும் பல லட்சம் பேர் பிறக்கின்றனர். அப்படி பிறக்கும் அனைவருக்கும் நாம் ஜாதகம் கணித்தால் ஒரே மாதிரியான ஜாதகம் இருவருக்கு அமைவதில்லை என்கிறா உண்மையை நாம் உணர முடியும். அந்த ஜாதக கட்டங்களில் கிரகங்களை பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன. அப்படி புதன் மற்றும் கேது கிரகம் ஒரு ஜாதகத்தில் இணைந்திருந்தால் ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

budhan

ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் 12 வீடுகள் அல்லது ராசிகளில் ஏதேனும் ஒரு வீட்டில் அறிவாற்றலுக்கு காரகனாகிய புதன் பகவான், ஞானகாரகனாகிய கேது பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால் அந்த ஜாதகருக்கு சில நற்பலன்களும், சில பாதக பலன்களும் ஏற்படுகிறது.

ஒரு மனிதனுக்கு புதன் தாய்மாமாவிற்கு காரகத்துமாக இருக்கிறார். புதன் மற்றும் கேது இரண்டு பாப கிரகங்கள் ஜாதகத்தில் எந்த ஒரு வீட்டிலும் இணைந்திருந்தால் அந்த நபருக்கு தாய்மாமாவின் உறவு அதிக காலம் நீடிக்காது. மனஸ்தாபங்களால் பிரியும் வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும் இந்த ஜாதகர்கள் சமய, சூழ்நிலைகேற்ப மாறும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கேது முன்னோர்களுக்கும் காரகனாக இருப்பதால் முன்னோர்கள் வழி சொத்துகளில் இந்த ஜாதகருக்கு பிரச்சனை இருக்கும். எதிலும் முழுமையாக செயல்புரிய மாட்டார்கள்.

Astrology ketu

அதே நேரத்தில் கேதுவுடன் புதன் இருப்பதால் கலைகளின் மீது அதிக ஈடுபாடிருக்கும். தான் பார்க்கும், கேட்கும், படிக்கும் எந்த ஒரு விடயத்தையும் கற்று கொள்ள வேண்டும் என்கிற தீராத ஆர்வம் அதிகமிருக்கும். புத்தக பிரியர்களாக இருப்பார்கள். வீட்டில் பல புத்தகங்களை வாங்கி குவித்திருப்பார்கள். காதல் உணர்வுகள் அதிகம் கொண்டவராக இருப்பார்கள். ஆனால் கேதுவின் தாக்கத்தால் காதலில் வெற்றி பெற முடியா நிலை இவர்களுக்கு இருக்கும். ஆன்மீக தேடல் அதிகமிருக்கும்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினரின் இல்வாழ்க்கை சிறக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan and ketu palan in Tamil. It is also called as Budhan bhagavan in Tamil or Kethu bhagavan in Tamil or Jathagam palan in Tamil or Budhan ketu serkai in Tamil.