- Advertisement -
சமையல் குறிப்புகள்

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சாப்டான, கிரன்ச்சியான ஒரு சூப்பர் டிஷ் தாங்க இந்த காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை. இத ஒருமுறை செய்து சாப்பிட்டீங்கனா அப்பறம் சிக்கன், மட்டன் எல்லாத்துக்கும் குட்பை தான்.

- Advertisement -

காலிஃப்ளவரை பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும். சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் காலிஃபிளவர் வைத்து அசைவ சுவையிலே அதிகமான வெரைட்டிகளை செய்து சாப்பிடலாம். அது மட்டுமின்றி இது நல்ல சுவையான ஒரு உணவும் கூட, இந்த காலிஃபிளவரை வைத்து ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ரிச்சான பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் சுத்தம் செய்தது 1- கப், சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன், உப்பு -1டேபிள் ஸ்பூன், மிளகு -2 டேபிள் ஸ்பூன், கடுகு -1/2 டீஸ்பூன், சீரகம் -1/3 டீஸ்பூன், பெருங்காயம் -1/4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 கறிவேப்பிலை – 1கொத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 11/2 டீஸ்பூன், தக்காளி – 3, காஷ்மீரி சில்லி தூள் -1 டீஸ்பூன், தனியாத் தூள் -1 டீஸ்பூன், சீரகப் பொடி -1 டீஸ்பூன், சோம்பு பொடி – 1/2 டீஸ்பூன், எண்ணெய்- 250 கிராம், கொத்தமல்லி ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை விளக்கம்

முதலில் தண்ணிரில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் சுத்தம் செய்து வைத்த காலிஃபிளவரை போட்டு பத்து நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

காலிஃப்ளவரை பொரிக்க மாவை தயார் செய்து கொள்வோம். ஒரு பவுலில் சோள மாவு, அரிசி மாவு, மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் உப்பு இவையெல்லாம் லேசாக தண்ணீர் தெளித்து ஒரு முறை கலந்த பிறகு இதை தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பைப் பற்ற வைத்து பேனை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் காலிஃபிளவரை இந்த மாவில் முக்கி எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் கலருக்காக நாம் எதையும் சேர்க்கவில்லை எனவே பொரிக்கும் போது வெள்ளையாக தான் வரும். பொரித்து முடித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு இந்த எண்ணெய் பேனை அப்படியே வைத்து விடுங்கள்.

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து பேன் வைத்து சூடானவுடன், நான்கு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு பொரிந்த உடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் ஒரு கொத்து கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயம் என அனைத்தையும் சேர்த்து நல்ல பொன்னிறமாக வரும் வரை வெங்காயத்தை வதக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து அதுவும் நன்றாக வதங்க வேண்டும். இந்த நேரத்தில் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து தனியா தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சோம்புத்தூள், சீரகத்தூள், உப்பு மிளகுத்தூள் என அனைத்தையும் சேர்த்து ஒரு முறை எண்ணெயில் வதக்கிய பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த மசாலாக்களை வேக வைத்து கொள்ளுங்கள்.

இவையெல்லாம் நன்றாக வெந்து இந்த மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வர வேண்டும். அந்த பதத்திற்கு வதங்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு இந்த மாசலா சாஸ் போல இருக்கும். அடுப்பை அணைத்து விட்டு ஓரமாக எடுத்து வைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து ஏற்கனவே நாம் காலிஃபிளவர் பொரித்த எண்ணெய்யை வைத்து சூடாக்கி, முன்னமே பொரித்து வைத்த காலிஃபிளவரை மறுபடியும் எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து உடனே எடுத்து விடுங்கள். அந்த சூட்டுடனே நாம் இறக்கி வைத்த மசாலாவில் காலிஃபிளவரை சேர்த்து ஒரு முறை கிளறி மேலே கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறி விட வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி, பூரிக்கு வேர்க்கடலை தண்ணி சட்னி தள்ளுவண்டி ஸ்டைலில் ஈசியாக இப்படி மட்டும் செஞ்சு பாருங்க ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவீங்க!

இந்த காலிஃபிளவர் மிளகு வறுவல் நல்ல காரசாரமான அதே நேரத்தில் நல்ல ஒரு ரிச்சான டேஸ்டிலும் இருக்கும். இந்த டிஸ்சை நீங்க ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்தா போதும் திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருப்பீங்க.

- Advertisement -