வேர்க்கடலை தண்ணி சட்னி தள்ளுவண்டி ஸ்டைலில் ஈசியாக இப்படி செஞ்சு பாருங்க ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவீங்க

- Advertisement -

வேர்க்கடலை தண்ணி சட்னி | Verkadalai thanni chutney

தள்ளுவண்டி கடைகளில் கொடுக்கப்படும் வேர்க்கடலை சட்னி ரொம்பவே ருசியாக இருப்பதை நாம் ருசித்திருப்போம். இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, சப்பாத்தி, பூரின்னு எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள செம டேஸ்ட்டியாக இருக்கக்கூடிய இந்த வேர்க்கடலை தண்ணி சட்னி ரெசிபி சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி அரைப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் – ஏழு, சமையல் எண்ணெய் – மூன்று டீஸ்பூன், வறுத்து தோல் உரித்த வேர்க்கடலை – கால் கப், பொட்டுக் கடலை – கால் கப், சீரகம் – கால் டீஸ்பூன், பூண்டு – இரண்டு பல், இஞ்சி – ஒரு சிறு துண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து, தேங்காய் துண்டுகள் – கால் கப், உப்பு – தேவையான அளவு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 2, வெங்காயம் – ஒன்று.

- Advertisement -

செய்முறை

வேர்க்கடலை தண்ணி சட்னி செய்வதற்கு முதலில் வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பச்சை மிளகாய்களை காம்பு கிள்ளி சேர்த்து லேசாக வதக்குங்கள். அப்போது தான் பச்சை மிளகாயில் இருக்கும் காரம் சட்னியில் இறங்காது, சுவையும் நன்றாக இருக்கும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வதக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையை தோல் உரித்து சேர்க்க வேண்டும். பொட்டுக்கடலை அதே அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ரெண்டு பூண்டு பல், அதே அளவிற்கு இஞ்சி துண்டுகள் தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக அரை மூடி அளவிற்கு சிறிய தேங்காயை துண்டு துண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது தேங்காயை துருவியும் சேர்க்கலாம். பின்னர் மிஸ்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். பிறகு அதே வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு சீரகம், வர மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெறும் மூணே விசில் தான் பருப்பு, பால், எதுவும் சேர்க்காமல் குக்கரில் சர்க்கரை பொங்கல் சட்டுனு ரெடி பண்ணிடலாம். அட இப்படியும் கூட ஈஸியா பொங்கல் வைக்கலாமா!

வெங்காயம் பிரவுன் கலரில் பொன்னிறமாக வதங்கி வர வேண்டும். அப்போதுதான் சட்னி செம டேஸ்ட்டியாக இருக்கும். வெங்காயம் வதங்கியதும் சட்னியில் சேர்த்து மிக்ஸி ஜாரை கழுவி தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு கூடுதலாக எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் சுவையாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் வேர்க்கடலை தண்ணி சட்னி ரெசிபி செஞ்சு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -