
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் கேரட் அல்வா எப்படி செய்வது. அதுவும் ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி அல்வா செஞ்சா, அல்வா தொண்டையில் இறங்குவதே தெரியாதுங்க. மிஸ் பண்ணாம ஒரு வாட்டி இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள். கேரட் – 1/2 கிலோ, காய்ச்சிய பால் – 1/2 கப், சர்க்கரை – 1/2 கப், முந்திரி உலர் திராட்சை தேவையான அளவு, நெய் நான்கிலிருந்து ஐந்து டேபிள் ஸ்பூன்.
முதலில் அரை கிலோ அளவு கேரட்டை வாங்கி தோல்சீவி கழுவி துருவி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கேரட் அப்படியே இருக்கட்டும். அடுத்தபடியாக திக்காக காய்ச்சிய பாலில் நமக்குத் தேவைப்படும். பாலை காய்ச்சி அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் அடி கனமான அகலமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி திராட்சையை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் மீதமிருக்கும் நெய்யில் துருவிய கேரட்டை போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மிதமான தீயில் நன்றாக வறுக்க வேண்டும். கேரட்டில் இருக்கும் பச்சை வாடை முழுமையாக, வதக்கும்போது நீங்கினால் தான் கேரட் அல்வா சுவையாக இருக்கும்.
கேரட் நன்றாக வதங்கியதும் தயாராக எடுத்து வைத்திருக்கும் 1/2 கப் பாலை ஊற்றி, கை விடாமல் நன்றாக கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் மூடி கேரட்டை நன்றாக வேக வையுங்கள். அடிக்கடி மூடியைத் திறந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் கேரட் அடி பிடித்து விடும்.
கேரட்டும் பாலும் சேர்ந்து நன்றாக வெந்து வந்தவுடன், சர்க்கரையை கொட்டி நன்றாக கலந்துவிட வேண்டும். சர்க்கரையை கொட்டியவுடன் அல்வா கொஞ்சம் இலகிய பதத்திற்கு வரும். மீண்டும் இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள், நன்றாக அல்வாவை கலந்துவிட கட்டி பதத்திற்கு வந்துவிடும்.
அடுப்பை அனைத்து விட்டு இரண்டு சிட்டிகை ஏலக்காய் பொடியை மேலே தூவி விடுங்கள். அல்வாவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி இறுதியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சையை இதன் மேலே தூவி பரிமாறினால் சுவையான கேரட் அல்வா தயார்.