- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். இன்றைய நாள் வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக துவங்கும். கொஞ்சம் ஆடம்பர செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்களுக்கு கூட, இன்று பெரிய அளவில் நல்லது நடக்கும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். பெரிசாக பாதிப்புகள் இருக்காது. வேலை விஷயத்தில் முழுசாக யாரையும் நம்ப வேண்டாம். உங்களுடைய வேலைகளை நீங்களே செய்யுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புது அனுபவங்கள் கிடைக்கும். புது நண்பர்களின் அறிமுகம். கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் சின்ன பின்னடைவு வரலாம். உடல் அசதியால் வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். மற்றபடி பெருசாக பிரச்சினைகள் இல்லை. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றபடி இந்த நாள் பெருசாக பாதிப்புகள் இருக்காது. மனதில் தேக்கி வைத்திருந்த ஆசைகளை வெளிப்படுத்துவீர்கள். காரியத்தடை விலகும். காதல் கைகூடும். சுப காரிய செலவுகள் நடக்க துவங்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று திறமையாக செயல்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். ப்ரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குறிப்பாக மாணவர்கள் இளைஞர்களுக்கு இன்று நல்ல காலம் கைக்கூடி வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். நீண்ட நாள் இருந்த மன பாரம் குறையும். பஞ்சாயத்துகள் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பெயர் புகழ் உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். சோம்பேறித்தனம் விலகும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடைய ஆசிர்வாதம், பரிபூரணமாக கிடைக்கும். இறைவழிபாடு சந்தோஷத்தை கொடுக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எந்த விதமான டென்ஷனும் இருக்காது. உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தேவையில்லாத நண்பர்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். எதிரி தொல்லை நீங்கும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். முன்கோபம் வேண்டாம். பேசுவதை கூடுமானவரை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த நல்லது உங்கள் வாழ்வில் நடக்கும். மன நிம்மதி கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து கூடும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றமான போக்கு நிலவும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. வண்டி ஓட்டும் போது கைபேசி பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -