- Advertisement -
சமையல் குறிப்புகள்

ஒரு கப் கேரட்டும், ஒரு கப் பாலும் மட்டும் இருந்தா போதும். சூப்பரனா ஸ்வீட் ரெசிபியை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சட்டுனு செய்து கொடுத்து அசத்திடலாம். இது கேரட்ல செய்த ஸ்வீட்ன்னு சொன்னா கூட, நம்ப மாட்டாங்க.

- Advertisement -

குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பது மிகவும் கடினமான காரியம். அப்படி காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதை அவர்களுக்கு பிடித்த உணவாக செய்து கொடுத்தால் சத்தம் இல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். அந்த வகையில் கேரட்டை பாலில் வேக வைத்த இந்த ஸ்வீட் ரெசிபியாக செய்து கொடுத்துப் பாருங்கள். இது கேரட்டில் செய்த ஸ்வீட் தான் என்று குழந்தைகள் கண்டுபிடிக்க கூட மாட்டார்கள். பாலில் வேக வைத்து விடுவதால் இதில் கேரட்டின் மணம் தெரியாது. இந்த ஸ்வீட்டை செய்ய அதிகமான செலவு இல்லை நேரமும் தேவைப்படாது. பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் இது போல உணவுகளை கொடுக்கும் போது, நல்ல ஒரு ஹெல்தியான உணவை அவர்களுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தது போல இருக்கும். இப்போது அந்த ஸ்வீட் ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: கேரட் – 1 கப், காய்ச்சிய பால் – 1 கப், அரிசி மாவு – 1/2, சர்க்கரை – 1/2 கப், ஏலக்காய் – 3, நெய் – 3 டீஸ்பூன்.

- Advertisement -

முதலில் கேரட்டை தோல் சீவி நன்றாக சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் நல்ல திக்கான பால் எடுத்து அதையும் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி ஆற வைத்து எடுத்து வைத்துக் கொள்ள கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதில் நறுக்கிய கேரட்டையும், பாலையும் சேர்த்து இரண்டு விசில் வரை வேக விடுங்கள். காய்ச்சாத பாலை ஊற்றி விடாதீர்கள் பால் திரிந்து விடும்.

குக்கர் விசில் இறங்கியவுடன் குக்கரில் இருந்து கேரட்டை எடுத்து ஆற வைத்து அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த கேரட் பேஸ்டுடன், குக்கரில் கேரட் வேக வைத்து மீதம் இருக்கும் பாலையும் சேர்த்து அத்துடன் சக்கரை, (சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சக்கரை கூட சேர்த்து கொள்ளலாம்) அரிசி மாவு, ஏலக்காய் பொடி அனைத்தையும் ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அரைத்த கேரட் கலவையை அதில் சேர்த்து நன்றாக கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கலந்தாலே போதும்.

இது அடுப்பில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு சுருண்டு வரும். இப்படி சுருண்டு வரும் போது இன்னும் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி ஒரு முறை கலந்து அடுப்பை அனைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு பிளேட்டில் கொஞ்சம் நெய் தடவி நீங்கள் தயார் செய்த ஸ்வீட்டை தட்டில் கொட்டி நன்றாக பரப்பி ஆற வைத்து விடுங்கள். இதற்கு மேல் உங்களுக்கு பிடித்த நட்ஸ் எதுவாக இருந்தாலும் அதை அதன் மேல் தூவலாம் பார்க்கவும் அழகாக இருக்கும் குழந்தைகளுக்கும் நட்ஸ் கொடுத்த நல்லது.

இதையும் படிக்கலாமே: உங்க கிட்ட கோதுமை மாவு இருந்தா அத வைச்சு சுவையான இரண்டு ஸ்னாக்ஸ் சூப்பரா செய்திடலாம். இதுக்கு மேல இந்த ரெசிபியை ஈஸியா செய்யவே முடியாது.

இப்போது ஓரளவிற்கு இந்த ஸ்வீட் ஆறிய உடன் உங்களுக்கு தேவையான வடிவில் நறுக்கி எடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். இது கேரட்டில் செய்த ஸ்வீட் என்று சொன்னால் குழந்தைகள் நம்பவே மாட்டார்கள்.

- Advertisement -