உங்க கிட்ட கோதுமை மாவு இருந்தா அத வைச்சு சுவையான இரண்டு ஸ்னாக்ஸ் சூப்பரா செய்திடலாம். இதுக்கு மேல இந்த ரெசிபியை ஈஸியா செய்யவே முடியாது.

- Advertisement -

இது எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு தான்போளி. இது மற்ற பொருட்களைப் உணவுகளை போல் அனைத்து கடைகளிலும் சாதரணமாக கிடைக்காது காரணம் அதை செய்யும் முறை கொஞ்சம் சிரமம். அதனால் உடனடியாக போளி செய்ய பலரும் யோசிக்கப்பார்கள். இந்த பதிவில் இந்த போளியை மிகவும் சுலபமாகவும் இதே மாவை வைத்து இன்னொரு சுலபமான ஸ்நாக்ஸ் ரெசிபியை ரொம்ப சிம்பிளா அதே நேரத்துல ரொம்ப சீக்கிரமாக செய்யறது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

இந்த போளி செய்வதற்கு ஒன்றரை கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள் எந்த கப்பில் கோதுமை மாவு அளந்தீர்கள் அதை கப்பில் கால் கப் அளவிற்கு சோள மாவு சேர்த்து அரை ஸ்பூன் உப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இந்த மாவை நல்ல சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இதன் உள்ளே வைக்கும் ஸ்டாப்பிங்கை தயார் செய்து கொள்வோம். அதற்கு கோதுமை மாவு எந்த கப்பில் அளந்தீர்களோ அதில் இரண்டு கப் அளவுக்கு தேங்காய் துருவலை எடுத்து கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் அரை டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் துருவலை இதில் சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பூ போல அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயிலிருந்து எண்ணெய் வெளியே வர கூடாது அந்த அளவிற்கு தேங்காய் துருவலை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கோதுமை அளந்த கப்பில் ஒன்னரை கப் அளவிற்கு காய்ச்சிய பாலை ஊற்றி லேசாக கொதி வந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து அதில் கால் கப் அளவிற்கு வெல்லம் சேர்த்து நன்றாக இளகி வரும் வரை கலந்து கொண்டே இருங்கள், கொஞ்ச நேரம் இப்படி கலந்தால் இளகிய வெல்லம் கெட்டியாக மாறி விடும்.

- Advertisement -

அப்போது அடுப்பை அணைத்து விட்டு இந்த பூரணத்தை கொஞ்சம் நேரம் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். இன்னும் நன்றாக இறுகி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்து விடும்.

இப்போது எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவை சப்பாத்தி விட கொஞ்சம் கனமாக தேய்த்து அதன் உள்ளே நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை உள்ளே வைத்து சோமாசை போல மடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.

இதையே போளியாக செய்ய வேண்டுமென்றால் சப்பாத்தியை விட மெலிதாக திரட்டி அதனுள் இந்த ஸ்டப்பிங்கை வைத்து உருண்டை பிடித்து மறுபடியும் சப்பாத்தி கட்டையில் வைத்து லேசாக தேய்த்துக் தவாவில் போட்டு நெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுத்தால் சுவையான போளி ரெடி. ஒரே மாவு பூரணத்தை வைத்து இரண்டு வகையான டிஷ்களை செய்திடலாம்.

- Advertisement -