- Advertisement -

ஆடி பௌர்ணமியில் சொல்ல வேண்டிய சந்திரன் மந்திரம்.

- Advertisement -

நாளை ஆடி பௌர்ணமியோடு சேர்ந்து இன்னும் என்னென்ன விசேஷங்கள் எல்லாம் சேர்ந்து இருக்கிறது, அந்த விசேஷ நாட்களுக்கு ஏற்ப எந்தெந்த வழிபாட்டு முறைகளை செய்தால் நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான சுருக்கமான தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஆன்மீக தகவல் நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும்.

நாளை ஆடி மாத பௌர்ணமி, ஆடித்தபசு, குரூப் பூர்ணிமா, ஹயக்ரீவர் ஜெயந்தி, இத்தனை சிறப்புமிக்க அம்சங்களும் நாளைய தினத்தில் அடங்கி இருக்கிறது. ஆடி பௌர்ணமி என்றால் அம்பாள் வழிபாட்டிற்கு மிக மிக உகந்த நாள். ஆகவே அம்மனை நினைத்து வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு விளக்கு போட்டு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஆடித்தபசு எதற்காக கொண்டாடப்படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றுதான். சிவன் பெரியவரா, பெருமாள் பெரியவரா, என்ற விவாதம் வந்தபோது பூலோகத்தில் பெரிய பிரளயமே வெடித்தது. அந்த சமயம் சக்தி தேவி ஊசி முனையில் நின்று ஹரியும் ஹரனும் ஒன்றுதான் என்பதை நிரூபிப்பதற்காக தவம் செய்தார்கள்.

அந்த சமயம் சிவபெருமான் சங்கரநாராயண மூர்த்தியாக அவதாரம் எடுத்த நாளை தான் ஆடித்தபசுவாக கொண்டாடுகின்றோம். இந்த நாளில் பெருமாளையும் சிவனையும் ஒரு சேர நாம் வழிபாடு செய்ய வேண்டும். ஹரியும் ஹரனும் இருவரும் வேறு வேறு அல்ல இரண்டு தெய்வங்களும் ஒன்றுதான் என்பதை வலியுறுத்தவே இந்த ஆடித்தபசு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

ஹயக்ரீவர் ஜெயந்தி. ஆடி பௌர்ணமி தினத்தில் தான் ஹயக்ரீவர் அவதரித்ததாக வரலாறு சொல்கிறது. சரஸ்வதிக்கு குருவாக இருப்பவர் ஹயக்ரீவர். படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் வேலையில் திறமையாக செயல்பட வேண்டும் என்பவர்கள் எல்லாம் நாளைய தினம் ஹயக்ரீவர் வழிபாட்டை மேற்கொள்ளவும்.

இரண்டு ஏலக்காயை பெருமாள் படத்திற்கு முன்பு நெய்வேத்தியமாக வைத்து ஹயக்ரீவரை மனதார நினைத்து வணங்கி அந்த ஏலக்காயை சாப்பிட்டாலும் உங்களுக்கு ஹயக்ரீவர் ஆசிர்வாதம் கிடைத்துவிடும். உங்களுடைய பிள்ளைகளை நாளைய தினம் ஹயக்ரீவர் வழிபாடு செய்ய சொல்லுங்கள்.

- Advertisement -

நம்முடைய குருவுக்கு நன்றி தெரிவிக்க கூடிய நாள் குரூப் பூர்ணிமா. ஒவ்வொருவருடைய வாழ்க்கை சிறப்படைவதற்கும் நிச்சயமாக ஒரு குரு காரணமாக இருப்பார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கான குரு யாராவது இருப்பார்கள். நாமே நமக்கான குருவை தேர்ந்தெடுக்க கூட வழிபாட்டை மேற்கொள்ளலாம். சாய்பாபா, பாம்பன் சுவாமிகள், ஆதிசங்கரர் மகா பெரியவா இவர்கள் எல்லோருமே குருவின் பட்டியலில் வருபவர்கள்.

இப்படி யாராவது ஒருவரை நம் குருவாக ஏற்றுக்கொண்டு அவர் பாதை நடக்கும் போது நம்முடைய வாழ்க்கையிலும் நல்லது நடக்கும். இதோடு மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்தான் குரு. இப்படி நீங்கள் யாரை குருவாக தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்களோ அவர்களுக்கு நாளைய தினம் மரியாதை செய்ய வேண்டும்.

வெற்றிலை பாக்கு பூ பழத்தில் 11 ரூபாய் தர்ஷனை வைத்து கொடுத்தாலும் குருவின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பக்கத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு சென்று அவரை வணங்குவது சிறப்பு.

சுருக்கமாக நாளைய தினம் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி பார்த்து விட்டோம். சரி, இப்போது பௌர்ணமி நாளில் அந்த சந்திர பகவானின் தரிசனத்தை நாம் பெற வேண்டும், மன குழப்பம் நீங்க வேண்டும், குடும்பத்தில் சந்தோஷம் நிலவ வேண்டும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்றால் நாளை இரவு ஏழு மணிக்கு என்ன மந்திரம் சொல்லணும்.

பௌர்ணமி சந்திரன் மந்திரம்

ஓம் ஹ்ரீம் வம் சந்திரதேவாய நமஹ !

கையில் ஒரு கைப்பிடி பச்சரிசியை வைத்துக்கொண்டு நிலவைப் பார்த்துக் கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது எல்லாம் அடுத்த நாளிலிருந்து தானாக நடக்க தொடங்கி விடும். கையில் இருக்கும் அரிசியை நுணுக்கி சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கு வாயில்லா ஜீவன்களுக்கு உணவாக போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் அடியோடு அழிந்து போக ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

நாளைய தினம் அனைத்து தெய்வங்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைத்து, நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -