- Advertisement -

செவ்வாய்க்கிழமை குளிகை நேர பரிகாரம்

கடனை அடைப்பதற்கு உகந்த நாள் என்றால் அது செவ்வாய் கிழமை. சேமிப்பை பெருக்கிக் கொள்வதற்கு உகந்த நாள் என்றாலும் அதுவும் செவ்வாய்க்கிழமை தான். செவ்வாய் முருகனுக்கு உரியது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய எந்த காரியமும் நமக்கு பல மடங்கு வெற்றி தரும். அதிலும் இந்த பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க நவகிரகங்களில் செவ்வாய் பகவானால் மட்டும் தான் முடியும்.

ஆக முருகர், செவ்வாய் இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து நமக்கு நன்மையை செய்யப்போகும் இந்த நாளில், வரப்போகும் குளிகை நேரத்தையும் நாம் சரியாக சேர்த்து பயன்படுத்தும் போது, அபரிவிதமான பலனை பெற முடியும். செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து குளிகை நேரம் எப்போது வருகிறது. நிறைய பணம் சேர என்ன பரிகாரம் செய்யணும். கடனை திருப்பிக் கொடுக்க என்ன பரிகாரம் செய்யணும். ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

முதலில் கடனை அடைப்பதற்கு உண்டான பரிகாரத்தை பார்த்து விடுவோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கவர் தேவை. எதுவும் எழுதாத வெள்ளை நிறக் கவர், அல்லது பிரௌவுன் கலர் எது வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கவருக்கு மேலே, நீங்கள் யாரிடம் பணம் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபரின் பெயரையும், அந்த தொகையையும் எழுத வேண்டும்.

உதாரணத்திற்கு ‘சுரேஷிடம் வாங்கிய 1,00,000 ரூபாய் கடன் அடைய வேண்டும் என்று எழுதிவிட்டு, அந்த கவருக்குள் வெறும் பத்து ரூபாயை போட்டாலும் போதும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில், குளிகை நேரத்தில் நேரத்தில் அந்தக் கவரில் பணத்தை போட்டால், நீங்கள் அந்த கடனை சீக்கிரம் திருப்பி கொடுப்பதற்கு உண்டான சந்தர்ப்பம் வரும்.

- Advertisement -

சீக்கிரம் கடனை திருப்பி அடைத்து விடுவீர்கள். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். வங்கி கடன், வீட்டுக் கடன், எந்த லோன் இருந்தாலும் அந்த லோன் சீக்கிரம் அடைவதற்கும் இதே போல பரிகாரத்தை செய்யலாம். சரி எங்களுக்கு கடனே இல்லை. எங்களுக்கு வருமானம் பெருக வேண்டும் என்ன செய்வது. ஒரு உண்டியல் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த உண்டியலில் முதலில் செவ்வாய் பகவானை நினைத்து 3 வெந்தயத்தை போடுங்கள். பிறகு பணத்தை சேமிப்பதற்கு 100 ரூபாய் அந்த உண்டியலில் போட்டு வைக்கவும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில், குளிகை நேரத்தில் இந்த சேமிப்பை தொடங்கினால் மேலும் மேலும் உங்களுடைய வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வரக்கூடிய குளிகை நேரத்திலும் இப்படி நீங்கள் பணத்தை உண்டியலில் போட்டு வர உங்களுடைய வீட்டில் செல்வ கடாட்சம் மேலும் மேலும் பணத்தை சேர்ப்பதற்கான வாய்ப்புகளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனை தீர பரிகாரம்

செவ்வாய்க்கிழமை மதியம் 1:15 மணிக்கு குளிகை நேரமும், செவ்வாய் ஹோரையும் சேர்ந்து இருக்கிறது. மேலே சொன்ன இரண்டு பரிகாரத்தையும் செவ்வாய்க்கிழமை மதியம் சரியாக 1:15 மணிக்கு செய்தால் கிடைக்கக்கூடிய பலனை தடுக்க யாராலும் முடியாது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -