
இன்று பூமியில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரு விஷயத்திற்காக கஷ்டப்படுகிறார்கள் என்றால், அது என்னவாக இருக்கும். கடன். ஆடம்பர வாழ்க்கைக்காக ஆசைப் பட்டு ஏதாவது ஒரு லோன் வாங்கி விடுகின்றோம். அதை திருப்பி கட்டும் போது தான், கஷ்டமே தெரிகிறது. வாங்கிய பணத்திற்கு இரட்டிப்பு மடங்காக பணத்தை திருப்பி கட்ட வேண்டிய சூழ்நிலை.
வாங்கும் சம்பளம், வரக்கூடிய வருமானம் நம்முடைய தேவைக்கு பயன்படுகிறதோ இல்லையோ, கடனை திருப்பிக் கொடுக்கத்தான் அந்த பணம் பயன்படுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. இதிலிருந்து வெளிவர ஆன்மீக ரீதியாக என்னதான் செய்வது. சிவபெருமானை வழிபாடு செய்ய எவ்வளவு பெரிய கஷ்டங்களும் நம்மை விட்டு சுலபமாக விலகும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை சிவபெருமானை இந்த நேரத்தில் வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய கடன் சுமை எல்லாம் படிப்படியாக குறையும். அது மட்டுமா. சிவபெருமானை வழிபாடு செய்ய வாழ்க்கையில் இருக்கும் பல வகையான துன்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். எந்தெந்த நாளில் சிவபெருமானை வழிபாடு செய்தால், எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த சில எளிய தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
செவ்வாய்க்கிழமையில் வரும் எமகண்ட நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலைகளை வாங்கி கொடுத்து, சிவனுக்கு அர்ச்சனை செய்து, சிவபெருமானை கண்குளிர தரிசனம் செய்து, சிவன் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து, உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பாருங்கள். கடன் தொல்லை உடனடியாக விலகும். செவ்வாய்க்கிழமை காலை 9 – 10:30 எமகண்ட நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை அன்று அமாவாசை வரும் நாளில், ராகு கால நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்ய உங்கள் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மனநோயாளிகள் இருப்பார்கள், தீராத கவலையால் பித்து பிடித்து போய் இருப்பார்கள், இரவு தூக்கம் வராதவர்கள் இருப்பார்கள், இவர்கள் எல்லாம் இந்த நேரத்தில் ஈசனை வழிபட விமோசனம் கிடைக்கும். திங்கட்கிழமை ராகு காலம் காலை 7:30 – 9:00.
புதன்கிழமை காலை சிவபெருமானுடைய நடை திறக்கும் போதே, நீங்கள் கோவிலுக்கு சென்று விட வேண்டும். அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுத்து, அபிஷேகத்தை பார்த்து வேண்டிக் கொண்டால் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனடியாக தீரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலையே இல்லை என்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வியாழக்கிழமை இரவு பள்ளியறை பூஜை சிவன் கோவிலில் நடைபெறும். அந்த தரிசனத்தை நீங்கள் பார்த்தால் பெரிய செல்வந்தர்களாக மாறலாம். உங்களுக்கு இந்த தரிசனத்தை கண்ட பிறகு பணமழை பொழிய துவங்கும் பார்த்துக்கோங்க.
வெள்ளிக்கிழமையும், பௌர்ணமியும் ஒன்றாக சேர்ந்து வரும் நாளில் மாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் ஈசனை தரிசனம் செய்ய மகாலட்சுமியின் அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் இருக்கும் தரித்திரம் வறுமை நீங்கும்.
சனிக்கிழமையில் வரக்கூடிய ராகுகால நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்ய, நீங்கள் செய்த பாவங்களுக்கு எல்லாம் மன்னிப்பு கிடைக்கும். கர்ம வினை நீங்கும். ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷங்கள் விலக இந்த வழிபாடு ரொம்ப ரொம்ப நல்லது. சனிக்கிழமை 9 – 10:30 ராகு கால நேரம்.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் ஈசனை வழிபாடு செய்ய எதிரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். எதிரி தொல்லை நீங்கும். கண் திருஷ்டி விளகும். ஏவல் பில்லி சூனியம் போன்ற பல வகையான பிரச்சினையில் இருந்து நீங்கள் விடுபடலாம். அது மட்டும் இல்லாமல் கோழையாக இருப்பவர்கள் கூட தைரியசாலிகளாக மாறுவார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 டு 6 ராகு கால நேரம்.
இதையும் படிக்கலாமே: இந்த வார ராசிபலன் 10/03/2025 முதல் 16/03/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!
மேலே சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.