- Advertisement -

செவ்வாய் கிழமை தைத்திருநாளில் படிக்க வேண்டிய முருகன் திருப்புகழ்

- Advertisement -

செவ்வாய் கிழமையோடு சேர்ந்து தை ஒன்றாம் தேதி பிறந்திருக்கிறது. அப்போது இந்த மாதம் நமக்கு நல்ல மாதமாக தான் இருக்கும். ஏனென்றால் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். இந்த நாளில் பிறந்திருக்கும் தைப்பொங்கல் நமக்கு நிச்சயம் நல்லது தான் செய்யும். இந்த நாளில் முருகன் வழிபாட்டை பற்றியும், அவனது புகழைப் பாடக்கூடிய ஒரு திருப்புகழையும் படிக்காமல் போனால் இந்த நாள் நிறைவடையுமா?

இன்று இரவு தூங்குவதற்கு முன்பாக சுவாமி அரைக்கும் முன்பாகவோ அல்லது நீங்கள் இருந்த இடத்திலிருந்து இந்த திருப்புகழை படியுங்கள். தைமாதத்தில் நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். தை பிறந்தால் சில பேர், சில புது வழி விடயங்களை துவங்க காத்துக் கொண்டிருப்பார்கள்., தை மாதத்தில் மட்டுமல்லாமல் இந்த வருடம் முழுவதும் நீங்கள் எடுக்கக்கூடிய காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால், தினம் தினம் இந்த திருப்புகழை பாராயணம் செய்யலாம். அப்படி முடியவில்லை என்றாலும், வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமை அன்று இந்த திருப்புகழை படியுங்கள்.

- Advertisement -

மூச்சிருக்கும் வரை திருப்புகழ் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம், நிறைய பேருக்கு இருக்கும். இந்த திருப்புகழின் அருமை பெருமைகளை அடுத்தவர்கள் சொல்லி புரிந்து கொள்வதோடு, அவரவராக திருப்புகழ் புத்தகத்தை எடுத்து படிக்கும்போது தான் இந்த பாடலில் மறைந்திருக்கும் அர்த்தமும், பாடலை படிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய மன நிம்மதியும் தெரிந்து கொள்ள முடியும். திருப்புகழை நாளுக்கு நாள் படிக்க படிக்க, ஒவ்வொரு நாளும் நமக்குள் முருகர் வந்து ஐக்கியம் ஆவதை நம்மால் உணர முடியும். நீங்க வேணும்னா ஒரு 48 நாள் தொடர்ந்து இந்த பாடலை மட்டும் படித்து பாருங்கள் இந்த உணர்வை நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.

திருப்புகழ் 216 பாடல்

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க – அறியாத

- Advertisement -

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க – முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற – குமரோனே

- Advertisement -

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப – மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க – பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த – வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த – மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் – முருகோனே.

இந்த பாடல் தான். இன்று படிக்க வேண்டிய திருப்புகழ். இந்த பாடலை உங்களால் படிக்க முடியும் என்றால் படியுங்கள். அப்படி படிக்க முடியாது என்பவர்கள், youtubeபில் இந்த வரிகளை டைப் செய்தாலே உங்களுக்கு அந்த பாடல் வரிகள் வந்துவிடும். அதைப் போட்டு உங்கள் காதால் கேளுங்கள். திருப்புகழின் 216 ஆவது பாடல். இந்த பாடலில் அர்த்தம் கொஞ்சம் சுருக்கமாக. “திரும்பத் திரும்ப இந்த பூமியில் நான் பிறக்கக் கூடாது. உன் திருபாதத்தில் எனக்கு இடம் வேண்டும். வறுமை நிறைந்த வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்று.

இதையும் படிக்கலாமே: தை மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

எல்லாவித செல்வமும் பெரும் புகழும் பெரிய வாழ்வும் எங்களுக்கு கிடைக்க வேண்டும். பேதம் பார்க்காமல் எங்களுக்கும் செல்வ செழிப்பை கொடு முருகா”. என்று முருகனின் அழகையும், முருகனுக்கு அலங்காரம் செய்திருக்கும் பூக்களைப் பற்றியும் புகழ்ந்து பாடப்பட்டுள்ள பாடல் வரிகள் தான் இவை. அருணகிரிநாதர் மானதார இந்த பாடலை பாடி கேட்டவுடன், அவருக்கு எல்லா செல்வ வளமும் கிடைத்தது, நாமும் இந்த பாடலை இன்று பாடுவோம். முருகப்பெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற்றுக் கொள்வோம். இந்த பூலோக வாழ்க்கை இனிமையாக அமையும். செய்த பாவங்கள் எல்லாம் தீரும் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -
Published by