- Advertisement -
சமையல் குறிப்புகள்

வெள்ளை சோள ரொட்டி செய்முறை

- Advertisement -

சிறுதானியங்களால் செய்யக்கூடிய உணவுகளை தான் பாரம்பரிய உணவுகள் என்று நாம் கூறுகிறோம். பல வகையான சிறுதானியங்கள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் பல அற்புதமான சத்துக்களும் இருக்கிறது. ஒவ்வொரு சிறுதானியமும் ஒவ்வொரு வகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றலுடன் திகழ்கின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது வெள்ளைச் சோளம்.

இந்த வெள்ளைச் சோளத்தில் கால்சியம், விட்டமின் பி, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் என பல சத்துக்கள் இருக்கின்றன. இந்த வெள்ளை சோளம் நம்முடைய எலும்புகளுக்கும், பற்களுக்கும், ஈறுகளுக்கும் நன்மை தருவதாக திகழ்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் இது உதவுகிறது. மேலும் சர்க்கரையின் அளவையும் இது கட்டுக்குள் வைக்கிறது. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்றவற்றை குறைக்கவும், குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்யவும் இந்த வெள்ளைச் சோளம் உதவுகிறது. அப்படிப்பட்ட வெள்ளை சோளத்தை வைத்து எப்படி ரொட்டி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • வெள்ளை சோள மாவு – 1 கப்
  • கோதுமை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • கேரட் துருவியது – ஒரு கப்
  • பச்சை மிளகாய் – 3
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெள்ளை சோளத்தை வாங்கி வந்து தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவை சலித்து பிறகு சேர்த்துக் கொள்வது நன்றாக இருக்கும்.

ஒரு அகலமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோள மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், கேரட், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு அந்த தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். பூரி மாவு பதத்திற்கு இந்த மாவை பிணைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஐந்து நிமிடம் இதை அப்படியே மூடி ஊற வைத்து விட வேண்டும்.

அடுத்ததாக அடுப்பில் தோசை கல்லை வைத்துவிட்டு ஒரு வாழை இலையை எடுத்து அதில் எண்ணெயை தடவி பிணைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து ஒரு உருண்டையை மட்டும் எடுத்து அந்த இலையில் வைத்து மெல்லியதாக தட்டிக் கொள்ள வேண்டும். தோசைக்கல் நன்றாக சூடானதும் தட்டி வைத்திருக்கும் இந்த ரொட்டியை அப்படியே எடுத்து தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெயை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு அதை திருப்ப போட்டு மறுபடியும் லேசாக எண்ணெய் ஊற்றி மற்றொருபுறமும் சிவக்கும் வரை அடுப்பில் வைத்து விட வேண்டும். சிறு குழந்தைகளுக்கு தருவதாக இருந்தால் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை ஊற்றி தரலாம். இந்த தோசைக்கு தனியாக தொட்டுக் கொள்ள எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் விரும்பி உண்ணும் உருளைக்கிழங்கு சாதம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த இந்த வெள்ளை சோளத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் உண்ண தருவதன் மூலம் அனைத்து விதமான ஆரோக்கியத்தையும் பெற முடியும்.

- Advertisement -