- Advertisement -
ஆரோக்கியம்

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்த இந்த 8 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

- Advertisement -

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பலரும் இயற்கை முறையை நாடுகின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகரித்து வந்தால், மாரடைப்பு வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது ரொம்பவே முக்கியமாக இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.

உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நார் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முழு தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் கணிசமாக குறையும். முளைகட்டிய தானியங்களை கூட நீங்கள் எண்ணெய் சேர்க்காமல் அவித்து அடிக்கடி சாப்பிடலாம்.

- Advertisement -

பாதாம், வால்நட், சூரியகாந்தி விதைகள், கடுக்காய் போன்றவற்றை அவ்வபோது உணவில் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு, சரிவிகித உணவு, சத்துள்ள உணவு போன்றவை மாறுபடும் பொழுது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விடுகிறது.

முட்டையின் மஞ்சள் கரு, இறால், கோழி, பன்னீர், வெண்ணை போன்றவற்றில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் காணப்படுகிறது. இதை எந்த அளவிற்கு உங்களால் குறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு குறைத்துக் கொள்ளுங்கள். இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தவிர்க்கப்படும்.

- Advertisement -

ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலம் உடலில் கொழுப்பினை சமநிலைப்படுத்த உதவி செய்கிறது. எனவே ஒமேகா 3 அதிகம் நிறைந்துள்ள மீன் வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். சால்மன், டிராட், டுனா, மத்தி போன்ற மீன் வகைகளில் இந்த ஒமேகா 3 அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தாலே கொழுப்பு சம நிலைக்கு வரும்.

எந்த வகை உணவு எடுத்துக் கொண்டாலும் நாம் கண்டிப்பாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஆவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சாப்பிட்டுவிட்டு உடனே படுத்து உறங்குவது தவறான செயல் ஆகும். உண்ட உணவு செரிமானம் ஆகும் வரை சிறிய வேலைகளில் ஈடுபடலாம். இதனால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் கணிசமாக குறையும். மெல்லோட்டம், நடை பயிற்சி, நீச்சல், டான்ஸ், யோகா போன்றவற்றை செய்வதன் மூலம் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

- Advertisement -

டிரான்ஸ் வகை கொழுப்புகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நிறைவுறாத இந்த கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. நல்ல கொழுப்பு இயற்கையான டிரான்ஸ் நிறைந்துள்ள பால் சார்ந்த பொருட்களை நீங்கள் இதற்கு பதிலாக பயன்படுத்தலாம். பால், சீஸ் போன்ற பால் பொருட்களில் இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு நன்மையை கொடுக்கும்.

தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து எப்படியாவது மீண்டு வந்து விட வேண்டும். இல்லை எனில் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயமும் உயரும். இதனால் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை செய்யாதீர்கள்.

இதையும் படிக்கலாமே:
டாக்டரிடம் போகாமல், மருந்து மாத்திரை சாப்பிடாமல், முழு ஆரோக்கியத்துடன் வாழ உங்களுக்கு ஆசையா? இரவு சாப்பிட்ட பிறகு இந்த 1 விஷயத்தை மட்டும் செய்தாலே போதும்.

அன்றாட உணவில் பீன்ஸ், பட்டாணி, ஓட்ஸ், பழ வகைகள், முழு தானியங்கள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது எனவே இது இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைத்து விடும்.

- Advertisement -