- Advertisement -
வீட்டு குறிப்புகள்

வீட்டிற்கு தேவையான எளிமையான குறிப்பு

கொக்கோ கோலா போன்ற செயற்கை குளிர்பானங்களை சாதாரணமாக குடித்தாலே உடலுக்கு கெடுதல் என்று சொல்லுவார்கள். அதில் உப்பு போட்டு எல்லாம் குடிக்காதீங்க. ரொம்ப ரொம்ப தப்பு. இன்று நாம் பார்க்கப் போவது, சுத்தம் செய்யக்கூடிய வீட்டு குறிப்பு.

சமையலறையில் எதிர்பாராமல் அடி பிடித்து கருகவிட்ட பாத்திரத்தை சுத்தம் செய்ய, பாத்ரூமை சுத்தம் செய்ய டாய்லட்டை சுத்தம் செய்ய வாஷ்பேசனை சுத்தம் செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ளபடி அமையும்.

- Advertisement -

முதலில் 1/2 கப் அளவு கோகோ கோலா ஒரு பவுலில் எடுத்துக்கோங்க. அதில் தூள் உப்பு 3 ஸ்பூன், துணி துவைக்கும் லிக்விட் 2 ஸ்பூன், பேக்கிங் சோடா 2 ஸ்பூன், போட்டு இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து விட்டு இதை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். வீட்டை சுத்தம் செய்வதற்கு பல வகைகளில் இந்த லிக்விடை பயன்படுத்தலாம்.

நீண்ட நாட்களாக பயன்படுத்தாத கடாய், அடிபிடித்த பாத்திரம் இதில் எல்லாம் இந்த லீக்விடை ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து ஒரு ஸ்டீல் நரை போட்டு தேய்த்து எடுத்தால் உடனே சுத்தமாகிவிடும். அதேபோல உங்கள் வீட்டு வாஷ்பேஷன் டாய்லெட் இவைகளில் எல்லாம் இந்த லிக்விடை நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு, 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தேய்த்து கழுவினால் அந்த இடமெல்லாம் பலிச் பலிச்சென மாறும்.

- Advertisement -

சுத்தம் செய்வதற்காக எவ்வளவோ பொருட்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம். ஆனாலும் கறைகளும் அழுக்கும் அவ்வளவு எளிதில் நீங்காது. குடிப்பதற்காக பயன்படுத்தும் இந்த கொக்கோகோலாவுக்கு சுத்தம் செய்வதில் அத்தனை பவர் இருக்கு.

இனிமே இந்த கொக்கோகோலாவை வாங்கி கொடுப்பீங்க. இருப்பினும் இப்படிப்பட்ட குளிர் பானங்களை குடிப்பதை தவிர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது மருத்துவர்களின் கருத்து. இதற்கு பதில் இயற்கையாக கிடைக்கும் பழத்திலிருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம்‌.

இதையும் படிக்கலாமே: சிங்கை 24 மணி நேரமும் சுத்தமாக வைத்துக் கொள்ள இல்லத்தரசிகளுக்காக வீட்டு குறிப்பு

சரி சரி கொக்கோகோலாவை வைத்து சுத்தம் செய்யக்கூடிய ஒரு எளிய குறிப்பு உங்களுக்கு தெரிந்திருக்கு. உடனே பத்து ரூபாய்க்கு ஒரு கொக்கோகோலா வாங்குங்க. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. நிறைய பணத்தை மிச்சம் புடியுங்க. இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு கட்டாயம் ஷேர் பண்ணுங்க.

- Advertisement -