
நாளை 26/6/2024 பஞ்சமி திதி வருகிறது. இந்த நாள் முத்திதி நாள் என்று கூறப்படுகிறது. பொதுவாக பஞ்சமி திதி என்பது வாராகி அம்மனுக்கு உகந்த திதியாகவும், வாராகி அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. அன்றைய தினம் நாம் எப்பொழுதும் போல் வாராகி அம்மனை வழிபடுவதோடு நம்முடைய மனக்கவலைகளும் மனக்கஷ்டங்களும் மனக்குழப்பங்களும் தீர்வதற்கு வாராகி அம்மனை நினைத்து செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நாளைய தினம் விடியற்காலை 1 மணி 25 நிமிடத்தில் இருந்து நள்ளிரவு 11 மணி 11 நிமிடம் வரை பஞ்சமி திதி இருக்கிறது. இந்த நேரத்திற்குள் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒரே ஒரு பொருளை யாருக்கும் தெரியாமல் பூஜையில் வைப்பதன் மூலம் நம்முடைய மனக்கவலை தீரும் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம்.
நாளைய தினம் பஞ்சமி திதி முடிவதற்குள் உங்களுடைய தீராத மனக்கஷ்டமும் தீராத மனக்குழப்பமும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய முந்திரிப் பருப்பை அதாவது முழுமையாக இருக்கக்கூடிய ஆறு முந்திரி பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் உங்கள் வலது கையில் இந்த மூட்டையை வைத்துக்கொண்டு வாராகி அம்மனிடம் உங்களுக்கு எதனால் மனக்கவலை ஏற்பட்டுள்ளது என்ன மனக்குழப்பம் உள்ளது அது எப்படி தீர வேண்டும் உங்களுக்கு சாதகமாக எந்த முறையில் அதுக்கு ஒரு முடிவு பிறக்க வேண்டும் என்று மனதார வாராஹி அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு வேண்டி முடித்த பிறகு உங்கள் பூஜை அறையிலேயே இந்த மூட்டையை யாரு கண்ணுக்கும் தெரியாத அளவிற்கு வைத்து விடுங்கள்.
மறுநாள் காலையில் எழுந்து எப்போதும் போல் குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய ஆலமரம், அரசமரம் அல்லது வேப்பமரம் இந்த மூன்று மரங்களில் ஏதாவது ஒரு மரத்தின் அடியில் நாம் எடுத்துச் சென்ற முந்திரி பருப்பை போட்டு விட வேண்டும். வேறு எந்த மரங்களிலும் போடக்கூடாது.
கோவிலில் இருக்கக்கூடிய மரத்திற்கு தான் போட வேண்டும். அவ்வாறு நாம் போட்ட அந்த முந்திரிப் பருப்பை அந்த மரத்தடியில் இருக்கும் எறும்புகள் வந்து சாப்பிடும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் நம்முடைய மனக்கவலையும் மனக்குறையும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே: ராஜபோக வாழ்க்கை கிடைக்க முருகன் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக வழிபாட்டை வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து செய்ய வாராகி அம்மனின் அருளால் விரைவிலேயே மன குழப்பம் அனைத்தும் நீங்கும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.