- Advertisement -

வீண் வம்பு வழக்கு பிரச்சனைகள் தீர வழிபாடு

- Advertisement -

நாம் சிவனே என்று அமைதியாக இருந்தாலும் நம்மை தேடி வம்புகளும் வழக்குகளும் பழிகளும் வந்து சேரும். இதற்கு நாம் எந்த வகையிலும் காரணமாக இல்லாத போதும், நம்மை இழுத்து நமக்கு பிரச்சனைகளை தருவார்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளியே வரவும், அதேசமயம் நீண்ட நாட்களாக கோர்ட்டு கேசு என்று அலைந்து கொண்டு இருப்பவர்களுக்கு அவர்களுக்கு சாதகமான முறையில் தீர்ப்புகள் கிடைத்து அந்த கோர்ட் கேஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரவும் கால பைரவரை எந்த நாளில் சென்று வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வீண் வம்பு வழக்கு பிரச்சனைகள் தீர வழிபாடு

காலத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கக்கூடிய அற்புதமான கடவுளாக திகழ்பவர் தான் கால பைரவர். இவர் பாதுகாக்கும் காவல் தெய்வமாகவும் திகழ்கிறார். அப்படிப்பட்ட காவல் தெய்வத்தை நாம் வழிபடும் பொழுது நமக்கு பாதுகாப்பு என்பது கிடைக்கும். நம் மேல் விழுந்த பழிகளை நீக்க இவர் நமக்கு துணை புரிவார். தேவையற்ற வீண் பிரச்சனைகள் எதுவும் நமக்கு நேராக அளவிற்கு நம்மை பாதுகாப்பார். அப்படிப்பட்ட காலபைரவரை எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனி பிரதோஷ நாள் அன்று ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு அந்த கோவிலில் இருக்கக் கூடிய கால பைரவரின் சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கு 9 அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வைத்து அவர் முன்பாக அமர்ந்து அவருடைய மூல மந்திரங்களை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

மூலமந்திரம் தெரியாதவர்கள் “ஓம் கால பைரவரே போற்றி” என்னும் எளிமையான மந்திரத்தை கூட கூறலாம். இப்படி 108 முறை கூறும் பொழுது அவருக்கு தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அன்றைய தினம் சிவபெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம் அனைத்தும் நிறைவடைந்த பிறகு கோவிலில் இருக்கக்கூடிய பக்தர்களுக்கு தயிர் சாதத்தை பிரசாதமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக மூன்று பிரதோஷங்களோ அல்லது ஒன்பது பிரதோஷங்களோ நாம் இந்த வழிமுறையை பின்பற்றி கால பைரவரை வழிபட்டோம் என்றால் நம் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளும், கோர்ட் கேசுகளும், அவமானங்களும் ஒரு தீர்வுக்கு வரும். நம்மிடம் இருக்கக்கூடிய நியாயம் வெளிப்படும். நம் மீது பழி சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பார்கள்.

இதையும் படிக்கலாமே:கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்

மிகவும் எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த இந்த காலபைரவர் வழிபாட்டை சனி பிரதோஷ நாளன்று ஆரம்பித்து செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் இருக்கக்கூடிய வீண் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும், நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -
Published by