- Advertisement -

தயிர் பல சத்துக்களை தரக்கூடிய உணவு. இதனை பலவகையான அழகு சாதன பொருட்களோடும் பயன்படுத்தலாம். தயிர் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவு என்றால்! தயிர் முழுவதுமாக புரதங்கள் மற்றும் கால்சியம் சத்தால் நிரம்பப்பட்ட ஒன்றாகும். அதிலும் முக்கியமாக விட்டமின் டி என்ற சத்து இந்த தயிரில் உள்ளது. அந்த விட்டமின் டி என்ற சத்து நம் தோலினை மேலும் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் ஒன்றாகும்.

தயிர் முழுவதுமாக நல்ல பாக்டீரியாவால் இணைக்கப்பட்ட ஒன்றாகும். அத்தகைய பாக்டீரியாவில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி என்ற தன்மை அமைந்துள்ளதன் பிரதிபலிப்பாக முகத்தில் வரும் பருக்களை தடுக்க மிகவும் உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அதில் இருக்கும் லாக்டிக் அமிலம் வரண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு அவர்களது சருமம் எப்பொழுதுமே ஈரபதமாகவே வைத்திருக்க உதவியாக இருக்கும். இப்படிப்பட்ட இவ்வளவு பயனுள்ள தயிரியினை வைத்து முகத்தை பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைப்பதற்கு உதவக்கூடிய குறிப்புகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்க உள்ளோம்.

- Advertisement -

குறிப்பு 1:

ஒரு சுத்தமான சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் உங்களுக்கு தேவையான அளவு தயிர் எடுத்துக்கொண்டு, அதில் கஸ்தூரி மஞ்சள் ஒரு டீஸ்பூன் போடவும். பின்னர் அதனை நன்றாக கலந்த விட வேண்டும். நன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தினை மிதமான வெதுவெதுப்புள்ள சுடு தண்ணீரில் மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கும். பருக்கள் சரியாகும்.

- Advertisement -

குறிப்பு 2:

ஒரு சுத்தமான சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்துக் கொண்ட பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் தேவையான அளவு எலுமிச்சை சாறை பிழிந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதனை உங்கள் முகத்தில் 20 நிமிடங்கள் நன்றாக காயும் வரையில் வைத்து விட்டு பிறகு அதனை சாதாரண நீரில் மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் குழிகள் மறையும். கரும்புள்ளிகள் நீங்கும்.

- Advertisement -

குறிப்பு 3:

ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 10 புதினா இலைகளை இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் தேவையான அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும். 20 நிமிடங்கள் முகத்தில் வைத்து நன்றாக காய வைத்து பின்னர் அதனை சாதாரண நீரில் துடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்க முகம் பொலிவுடன் காணப்படும்.

இதையும் படிக்கலாமே: கெமிக்கல் கலக்காத பவுடர் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

இவ்வளவு பலன்கள் வாய்ந்த எளிய முறையில் கிடைக்கும் இந்த பொருளை விட்டுவிட்டு ரசாயனம் கலந்த பல விலை உயர்ந்த பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை விட்டுவிட்டு ஏன் இவ்வளவு விலை கொடுத்து செயற்கைப் பொருட்களை வாங்க வேண்டும்? சிந்தியுங்கள் சிந்தித்து செயல்படுங்கள் என்று கூறி இந்த குறிப்பினை இத்துடன் நிறைவு செய்கிறோம்.

- Advertisement -