
பலருக்கும் தங்களுடைய இளம் வயதில் முடி அடர்த்தியாக இருந்திருக்கும். காலம் செல்ல செல்ல அவர்களுடைய அடர்த்தி என்பது படிப்படியாக குறைந்து இப்பொழுது எலிவால் போல போயிருக்கும். அந்த சூழ்நிலையில் பலரும் தங்களுடைய மலரும் நினைவுகளை நினைத்து கவலைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய இழந்த அடர்த்தியை திரும்பப் பெறுவதற்கு எந்த முறையில் ஜெல் தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தலைமுடி உதிர்தல் என்பது பல காரணங்களால் ஏற்படுகிறது. மேலும் தலைமுடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் உற்பத்தி ஆக வேண்டும். அப்படி புதிய முடிகள் உற்பத்தியாகாமல் இருக்கும் பட்சத்தில் முடியின் அடர்த்தியானது குறைய ஆரம்பிக்கும். மேலும் புதிய முடிகள் வளர்ந்தாலும் முடி உதிர்தல் என்பது தொடர்ந்து கொண்டே சென்றாலும் முடியின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். அதனால் முடியை அடர்த்தி ஆக்குவதற்கு முதலில் தலைமுடி உதிர்வை நிறுத்த வேண்டும். மேலும் புதிய முடிகளை வளர செய்ய வேண்டும். இதற்கு உதவக்கூடிய ஜெல்லை பற்றி பார்ப்போம்.
இந்த ஜெல்லை தயார் செய்வதற்கு நமக்கு ஆளி விதையுடன் இன்னும் இரண்டு பொருட்கள் தேவைப்படும். அவை தான் செம்பருத்தி இலையும், செம்பருத்திப்பூவும். 15 செம்பருத்தி இலைகளை பறித்துக் கொள்ளுங்கள். பிறகு ஐந்து செம்பருத்தி பூக்களை பறித்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இலையும் பூவையும் சுத்தம் செய்துவிட்டு ஒரு பாத்திரத்தை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் அந்த இலையுடன் சேர்த்து இரண்டு டீஸ்பூன் அளவிற்கு ஆளி விதையை அதனுடன் சேர்க்க வேண்டும்.
பிறகு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி மூடி விட வேண்டும். இது குறைந்தது 12 மணி நேரமாவது நன்றாக ஊற வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கூறலாம். 12 மணி நேரம் கழித்து இதை திறந்து பார்க்கும் பொழுது இது ஒரு வித ஜெல்லாக வந்திருக்கும். இப்பொழுது உங்களுடைய கைகளை பயன்படுத்தியே அதில் இருக்கக்கூடிய இலைகளையும் பூக்களையும் நன்றாக கசக்க வேண்டும்.
இவ்வாறு கசக்கி முடித்த பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி இதை அதில் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜெல்லை உங்களுடைய தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக இந்த ஜெல்லை பயன்படுத்தும் பொழுது நம்முடைய தலைமுடி உதிர்தல் என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும் புதிய முடிகள் வளர்வதற்குரிய வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: அழகை மேம்படுத்தும் அழகு குறிப்புகள்
மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய தலைமுடியின் அடர்த்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.