
இன்றைய அவசர காலகட்டத்திற்கு ஏற்ப எல்லாமே நினைத்தவுடன் நடக்க வேண்டும் என்ற மனநிலை வந்து விட்டது. இன்றைய கால சூழ்நிலையும் அப்படி மாறி விட்டது வீட்டில் ஆண் பெண் இருவரும் வேலைக்கு செல்வதால் யாருக்கும் எதையும் பொறுமையாக செய்ய நேரம் இருப்பதில்லை. அப்படி அவசரமாக அனைத்தையும் செய்ய முடியாது அல்லவா? ஒரு சில விஷயங்களுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கத்தான் செய்யும். குறிப்பாக தயிரை எடுத்துக் கொள்ளுங்கள் அதை உறை ஊற்றி தயிராக்க குறைந்தது 4 மணி நேரமாவது ஆகும். இதையும் கூட உடனடியாக செய்ய முடியும் என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம் அது எப்படி என்பதை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
முதலில் ஓரு கனமான பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். தயிருக்கு பாலை காய்ச்சும் போது தண்ணீர் சேர்க்கவே கூடாது. பின் இந்த இரண்டு ஸ்பூன் தண்ணீர் எதற்கு என்றால் தண்ணீர் ஊற்றிய பிறகு பாலை ஊற்றினால் பால் அடிப்பிடிக்காமல் இருக்கும். இது சாதாரணமாக பால் காய்ச்சும் போது கூட பாத்திரத்தில் முதலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிய பின் பாலை ஊற்றி காய்ச்சினால் பாத்திரம் அடிப்பிடிக்காது, தேய்க்கவும் சுலபமாக இருக்கும்.
பாலை நன்றாக தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி எடுத்த பின், அதை மற்றொரு பாத்திரத்திரத்திற்கு மாற்றி விடுங்கள். இந்த பாத்திரம் உங்கள் வீட்டில் இருக்கும் குக்கரின் உள்ளே வைக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். பால் மிதமான சூட்டில் இருக்கும் போதே குக்கரில் நன்றாக கொதிக்கும் நீரை ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த பால் ஊற்றி வைத்த பாத்திரத்ததில் கொஞ்சம் தயிர் உறை ஊற்றி எடுத்து குக்கரில் வைத்து விடுங்கள். குக்கரில் ஊற்றி இருக்கும் தண்ணீர் இந்த பால் பாத்திரத்தில் பாதி அளவு இருக்க தான் இருக்க வேண்டும்.
பின்பு நாம் குக்கரை சமைக்கும் போது எப்படி மூடுவோமோ கேஸ் கட்டை, வெயிட் எல்லாம் போட்டு மூடி வைத்து விடுங்கள். நீங்கள் குக்கரை குளிர்ந்த இடத்தில் வைக்க கூடாது. சற்று அனல் உள்ள இடமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பால் ரூம் டெம்பரேச்சர் மற்றும் குக்கரில் ஊற்றி இருக்கும் தண்ணீரின் சூட்டில் தான் தயிர் உறையும் எனவே இதை சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரை மணி நேரம் இப்படியே வைத்தால் போதும், பின்பு குக்கரை திறந்து பாருங்கள் அப்போது தான் காய்ச்சி வைத்த பால் எப்படி கெட்டித் தயிர் ஆகி இருக்கிறது என்று நீங்களே அதிசயத்து போவீர்கள். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்தருந்தால் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.