வெறும் பத்து ரூபாய்க்கு ஒரு பவுடர் டப்பா வாங்கினா போதும், வீடு மொத்தமே பளிச்சுன்னு மாறிடும். அது எப்படி இங்க பவுடர் டப்பா வச்சு வீட்டை சுத்தம் பண்றது யோசிக்கிறீங்களா வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

lady powder
- Advertisement -

வீட்டை எப்பொழுதும் சுத்தமாகவும் நல்ல நறுமணத்துடன் வைத்துக் கொள்வது மிகவும் நல்ல விஷயம். இதனால் வீட்டில் எப்பொழுதும் நல்ல அதிர்வுகள் இருப்பதுடன், உடல் ஆரோக்கியமாகவும், மன நிம்மதியாகவும் இருக்கும். வீட்டை சுத்தம் செய்வதை ஒரு வேலையாக நினைத்து செய்யாமல் நம் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது என்று நினைத்து செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்வதற்காக இனி நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டாம். பவுடர் இருந்தால் போதும் அதை வைத்து வீடு முழுவதையும் சுத்தம் செய்து நறுமணத்துடன் வைத்துக் கொள்ளலாம். அது எப்படி என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீடு எப்போதும் நறுமணத்துடன் சுத்தமாக இருக்க:
இதற்கு முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நான்கு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் நான்கு டீஸ்பூன் இந்த பவுடரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நல்ல நறுமணம் மிக்க எந்த பவுடரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இது இரண்டையும் நன்றாக கலந்து ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பரில் சேர்த்து சிறிய பொட்டலங்களாக மடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பொட்டலத்தின் மேல் குண்டூசி வைத்து சின்ன சின்ன துளைகளை போட்டு விடுங்கள்.

- Advertisement -

இப்போது நீங்கள் தயார் செய்து வைத்து இந்த பொட்டலங்களை பீரோவில் துணிகளுக்கு இடையில் வைத்து விட்டால் போதும். துணிகளில் இருந்து எந்த விட வாடையும் வராது. பீரோவில் பூச்சி தொல்லையும் இருக்காது. இதற்காக கெமிக்கல் கலந்த நாப்தலின் பால்களை இனி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

அதே போல் இந்த பொட்டலத்தை நாம் ஹேண்ட் பேக் பர்ஸ் போன்றவற்றில் வைத்து விடுங்கள். இவைகளில் இருந்து ஒரு வித வாடை வீசும். அது போல இனி வராது அது மட்டும் இன்றி வெளியூர் பயணங்களுக்கு எடுத்துச் செல்லும் பேக் போன்றவற்றிலும் இந்த பொட்டலத்தை போட்டு வைத்து விடலாம்.

- Advertisement -

எல்லோர் வீட்டிலும் முக்கியமான பேப்பர், ஃபைல்ஸ் என்று சிலவற்றை நாம் பீரோவில் வைத்திருப்போம். நாளாக நாளாக அங்கு பேப்பர் எல்லாம் மக்கி அதிலிருந்து வாடை வீசும் பூச்சிகளும் வந்து விடும். இப்போது தயார் செய்த பொட்டலத்தில் ஒன்றை அந்த இடத்தில் வைத்து விட்டால் வாடையும் வராது. பேப்பர் மக்கல் வாடைக்கு வரும் பூச்சியும் வராது. இதை பாத்ரூம், சிங்க், சமையலறை மேடை, போன்றவற்றில் எல்லாம் வைத்து விட்டால் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கவே இருக்காது.

பேக்கிங் சோடா பவுடர் கலந்த இந்த கலவையை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்த பிறகு பாட்டிலில் ஊற்றி துளைகள் போட்டு ஸ்பிரே செய்வது போல் தயார் செய்து கொள்ளுங்கள். இதை ஊற்றியே, வீட்டில் உள்ள சிங்க், சமையலறை மேடை, கேஸ் ஸ்டவ், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை எல்லாம் சுத்தம் செய்யலாம்.

இதை வைத்து சுத்தம் செய்யும் போது இவைகள் எல்லாம் பளிச்சென்று மாறி விடுவதுடன், நல்ல வாசத்துடன் இருக்கும். அது மட்டும் இன்றி இந்த வாடைக்கு கரப்பான் பூச்சி தொல்லையோ மற்ற பூச்சிகளின் தொல்லை எதுவும் இல்லாமல் இருக்கும்.

பத்து ரூபாய் பவுடர் டப்பாவில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவ்வளவு குறிப்புகள் இதை வைத்து செய்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -