- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் காணாமல் போக

- Advertisement -

நம்மில் பலரும் ஒருவரிடம் பேசுகிறோம் என்றால் அவர்களுடைய கண்ணை பார்த்து தான் பேசுவோம். அப்படிப்பட்ட கண் பிரகாசமான கண்ணாக இருக்கும் பொழுது நமக்கு பேச வேண்டும் என்ற ஆசையும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு அவர்களின் கண்ணை சுற்றி கருவளையம் இருக்கும். அதனால் அவர்களுடைய கண்கள் சோர்ந்து இருப்பது போல் தோன்றும். அப்படிப்பட்டவர்களுடன் பேசுவதை நாம் முடிந்த அளவிற்கு தவிர்த்துக் கொள்வோம். அதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கே கண்களை சுற்றி கருவளையம் இருப்பதால் முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி இல்லாமல் தென்படுவார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்றால் கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் நீங்க வேண்டும். அதற்கு தேங்காய் எண்ணெயுடன் எந்த பொடியை சேர்க்க வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கருவளையம் காணாமல் போக

கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தூக்கமின்மை, உடல் வறட்சி, ஆரோக்கியம் இல்லாத உணவு முறைகள் இப்படி நாம் கூறிக் கொண்டே செல்லலாம். மேலும் மன அழுத்தத்தின் காரணமாக கூட பலருக்கும் கண்ணை சுற்றி கருவளையம் என்பது ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இவை அனைத்தையும் நீக்கினாலும் வந்த கருவளையம் போவதற்கு என்று சில அழகு குறிப்புகளை நாம் பின்பற்ற வேண்டும்.

- Advertisement -

முதலில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதோடு குறைந்த அளவு 8 மணி நேரமாவது நிம்மதியாக உறங்க வேண்டும். மேலும் அதிக அளவில் கைபேசிகளையும், கணினியையும், தொலைக்காட்சியையும் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து இந்த ஒரு அழகு குறிப்பையும் நாம் பின்பற்றினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் நீங்கிவிடும்.

இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள்தான் தேவைப்படும். ஒன்று தேங்காய் எண்ணெய், மற்றொன்று மஞ்சள் தூள். சாதாரண மஞ்சள் தூளையும் பயன்படுத்தலாம் கஸ்தூரி மஞ்சள் தூளையும் பயன்படுத்தலாம். முதலில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து வெதுவெதுப்பாக சூடு செய்து கொள்ளுங்கள். பிறகு இதில் அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் துளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். கலந்து இந்த பேஸ்ட்டை உங்களுடைய கண்களை சுற்றி போட வேண்டும். இதை போட்டு 15 நிமிடமாவது அப்படியே விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் எப்பொழுதும் போல் குளிக்கச் செல்லலாம்.

- Advertisement -

இப்படி நீங்கள் தினமும் செய்வதன் மூலம் உங்கள் கண்களை சுற்றி இருக்கக் கூடிய கருவளையம் என்பது முற்றிலும் நீங்கும். மேலும் கண்களுக்கு இது குளிர்ச்சியை தருவதால் கண் பார்வையும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வெள்ளை முடி மறைய ஒரு ஹேர் பேக்

மிகவும் எளிமையான இந்த அழகு குறிப்பை தொடர்ச்சியாக தினமும் பின்பற்றுபவர்களுக்கு அவர்கள் கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் முற்றிலும் நீங்குவதோடு கண்கள் பிரகாசமாக திகழும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -