
வீடும் கோவிலும் கிட்டத்தட்ட ஒரே ஆற்றல் கொண்டதுதான். கோவிலில் எந்த அளவிற்கு தெய்வீக சக்தி இருக்கிறதோ? அதே அளவிற்கு வீட்டிலும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்மறை சக்திகளோ, தீய சக்திகளோ நம்மை ஒன்றும் செய்யாது. அப்படி எதிர்மறை சக்திகளும் தீய சக்திகளும் நம்மை எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் தெய்வீக சக்தி அதிகரிப்பதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக அனைவரின் இல்லங்களிலும் பூஜை அறை என்று ஒன்று இருக்கும். அந்த அறையில் அனைத்து தெய்வங்களின் படங்களையும் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் வைத்து வழிபாடு செய்வோம். தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் விளக்கேற்றி வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ ஏதாவது விசேஷ நாட்கள் வந்தால் மட்டுமே தான் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள்.
எப்படி பூஜை செய்தாலும் அந்த வீட்டில் தெய்வீக சக்தி இருந்தால் தான் நமக்கு பரிபூரணமான அருள் கிடைக்கும். அதை தவிர்த்து விட்டு நித்திய பூஜை செய்கிறோம். தெய்வீக சக்தி அதிகரித்து விடும் என்று நாம் நினைக்கக் கூடாது. என்னதான் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும் நமக்கு தெய்வீக சக்தி கிடைக்கவில்லையே எதிர்மறை ஆற்றல்களால் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோமே எப்பொழுது நமக்கு தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்று புலம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குரிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.
இதற்காக நாம் பெரிதும் சிரமப்பட வேண்டியது இல்லை. நாட்டு மருந்து கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய போகிறோம். இதற்கு இரண்டே இரண்டு பொருட்கள் போதும். அதுதான் ஜவ்வாது மற்றும் பச்சை கற்பூரம். ஏதாவது ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் வீட்டில் மண் அகல் விளக்கு இருக்கும் அல்லவா? அதைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள்.
முடிந்த அளவிற்கு புதிதாக வாங்கியதை உபயோகப்படுத்துவது நல்லது. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஜவ்வாவை போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு பெரிய துண்டாக பச்சை கற்பூரத்தை வைத்து விடுங்கள். அவ்வளவுதான். இது உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டும். பச்சை கற்பூரம் கரைந்து விட்டது என்றால் புதிதாக மறுபடியும் பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள். மாதத்திற்கு ஒருமுறை ஜவ்வாதை மாற்ற வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த ஜவ்வாதை எடுத்து சாம்பிராணி போடும் தூபத்தில் போட்டுவிட்டு புதிதாக ஜவ்வாது மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
இந்த இரண்டு வாசனை மிகுந்த பொருட்களுக்கு தெய்வத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இருக்கிறது. அதனால் யார் ஒருவர் பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு முன்பாக இந்த இரண்டு பொருட்களும் இருக்கிறதோ அந்த வீட்டில் அவர்கள் வைத்திருக்கும் சுவாமிகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: பண மழையில் நனைய பரிகாரம்
எளிமையான இந்த இரண்டு தெய்வீக சக்தி மிகுந்த பொருட்களை நாமும் நம் வீட்டில் வைத்து தெய்வ சக்தியை அதிகரித்துக் கொள்வோம்.