பண மழை பொழிந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. இன்றைய உலகம் சுழன்று கொண்டு இருப்பதே இந்த பணத்தின் மூலம் தான். பசித்தால் பணத்தை சமைத்து சாப்பிட முடியாது. ஆனால் பணம் இல்லாமல் எதையுமே வாங்க முடியாது. இதுபோல சூழ்நிலை இருக்கும் சமயத்தில் நாம் பணத்தை ஈர்ப்பதற்கு உண்டான வழிகளை தேடுவதில் தவறு ஒன்றும் கிடையாது. அதற்காக பணத்தை மட்டுமே ஈர்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
பணத்தோடு சேர்த்து கொஞ்சம் புண்ணியத்தையும் குழந்தைகளுக்கு சேர்த்து வையுங்கள். தவறான பாதையில் பணம் சம்பாதிக்காதீர்கள். பணத்தை சம்பாதிப்பதற்கு எத்தனையோ சூட்சம முறைகள் உள்ளது. அதிலிருந்து ஒரு சுலபமான முறையை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பணமழை பொழிய
இந்த பரிகாரத்திற்கு முதலில் நாம் ஒரு பொடியை தயார் செய்ய வேண்டும். பட்டை பொடி, லவங்க பொடி, பிரியாணி இலை பொடி, இந்த 3 பொடிகளும் நமக்கு தேவை. இந்த மூன்று பொருளையும் கடையிலிருந்து வாங்கி சம அளவுகளில் எடுத்துக்கொண்டு நன்றாக வெயிலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சலித்து வைத்துக் கொண்டாலும் சரி, முடியாதவர்கள் இதெல்லாம் கடையிலேயே பொடியாக கிடைக்கிறது.
அதை வாங்கி மூன்று பொடியையும் ஒன்றாக கலந்து பாட்டிலில் ஸ்டோர் செய்து பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்த பொடியை 1 ஸ்பூன் போட்டு கலந்து விடுங்கள். பிறகு இந்த தண்ணீரை கொண்டு நீங்கள் குளித்து வரவும். தினமும் இதை செய்ய முடியாது என்பவர்கள் வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது இந்த தண்ணீரில் குளித்து வர உங்களுடைய பணக்கஷ்டம் படிப்படியாக குறையும்.
இந்த தண்ணீரில் வெறும் உடம்புக்கு மட்டும் குளித்தாலும் தவறு இல்லை. தலைக்கு குளித்தாலும் தவறு இல்லை. குளித்து முடித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து முதலில் குல தெய்வத்தை வழிபட்டு நெற்றியில் சந்தனம், மஞ்சள் ஏதாவது ஒரு பொருளை இட்டுக் கொள்ள வேண்டும். அதாவது குருவுக்கு உரிய நிறமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் திலகம் உங்கள் நெற்றியில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் ஒரு வாரம் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு பலன் தரவில்லை. யாரெல்லாம் இதை செய்து பலன் அடைந்தீர்கள் என்று கேள்விகளை எழுப்ப வேண்டாம். உங்களுடைய முயற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை ஆழ்மனதில் வைத்து விட்டு, இந்த பரிகாரத்தை செய்தால் பணம் சம்பாதிப்பதில் இருக்கக்கூடிய தடைகளை தகர்க்கும் வேலைகளை இது செய்யும்.
இதையும் படிக்கலாமே: துரதிஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றும் தண்ணீர் பரிகாரம்
பணம் வருவதும் போவதுமாக இருக்கும். தேவைக்கு ஏற்ப செலவுக்கு கையில் பணம் இல்லை என்ற சூழ்நிலை வராது. இதுபோக சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான வழியையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டி கொடுக்கும். உங்கள் உடம்பை பிடித்த நெகட்டிவ் எனர்ஜியை விரட்டக்கூடிய வேலையை இந்த பரிகாரம் செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றினால் நல்லது நடக்கும். இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.