- Advertisement -
சமையல் குறிப்புகள்

நார்த் இந்தியன் ஸ்டைல, நம்ம ஊர்ல, நம்ம வீட்ல டக்குனு ஒரு டோக்ளா செய்யலாம் வாங்க.

- Advertisement -

வடமாநிலங்களில் இந்த ரெசிபி மிகவும் பிரபல்யமானது. நம்முடைய ஊர்களில் கூட நார்த் இந்தியன் சேட் ஐட்டம் கிடைக்கக்கூடிய கடைகளில் இந்த டோக்ளா கிடைக்கும். இதனுடைய சுவை வித்தியாசமாக இருந்தாலும், சுவையாக இருக்கும். இதை செய்வது அவ்வளவு கஷ்டம் ஒன்றும் கிடையாது. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையாக நம் கையாலேயே செய்து சாப்பிடலாம். எளிமையான முறையில் டோக்ளா ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலை மாவு – 1 கப், உப்பு – 1/2 ஸ்பூன், சர்க்கரை – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த இந்த மாவை ஒரு 10 நிமிடங்கள் அப்படியே ஊற வையுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு இதில் ஒரு சின்ன பாக்கெட் ஈனோ சால்ட்டை கொட்ட வேண்டும். அதாவது 5 கிராம் அளவு ஈனோ சால்ட் போட்டால் போதுமானது. ஈனோ சால்ட்டுக்கு பதிலாக சிலர் புளித்த தயிர் சேர்ப்பார்கள். சிலர் ஈஸ்ட், பேக்கிங் சோடா கூட சேர்ப்பார்கள். அது அவரவர் விருப்பம் தான். இந்த டோக்ளா நன்றாக பொங்கி சாஃப்டாக வருவதற்காக இதை நாம் பயன்படுத்துகின்றோம்.

சரி, இப்போது கரைத்து வைத்திருக்கும் மாவில் ஈனோசால்டை கொட்டி, நன்றாக மீண்டும் கலக்க வேண்டும். இந்த கலவையை அகலமான ஒரு ட்ரே அல்லது வட்ட வடிவில் உங்கள் வீட்டில் இருக்கும் எந்த கிண்ணத்தில் வேண்டும் என்றாலும் ஊற்றி, செட் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்திற்கு உள்ளே எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். அப்போதுதான் வெந்த பிறகு டோக்ளா ஒட்டாமல் கிடைக்கும். இட்லியை அவிப்பது போலத்தான் இதையும் வேகவைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதன் மேலே ஒரு ஸ்டாண்ட் வைத்து, தயார் செய்து வைத்திருக்கும் டோக்ளா பாத்திரத்தை அதன் மேலே வைத்து, ஒரு மூடி போட்டு 20 நிமிடங்கள் மிதமான தீயில் இதை வேக வைக்க வேண்டும்.

வெந்த பிறகு ஒரு கத்தி அல்லது குச்சை குத்தி பார்த்தால், அதில் ஒட்டாமல் டோக்ளா கிடைக்க வேண்டும். அப்போது டோக்லா வெந்து விட்டது என்று அர்த்தம். வெந்த டோக்ளாவை எடுத்து கொஞ்சம் நன்றாக ஆறவிடுங்கள். ஓரங்களில் செதுக்கி அப்படியே கவிழ்த்துப் போட்டால், டம்ளர் இட்லி போல டோக்ளா இட்லி தயார். இதை தேவையான வடிவத்திற்கு நீங்கள் வெட்டிக் கொள்ள வேண்டும். இதன் மேலே ஊற்ற ஒரு தாளிப்பு தயார் செய்யணும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு சின்ன கடாய் வைத்து, எண்ணெய் 1 ஸ்பூன், ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் கீறியது – 4, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு நன்றாக வதக்கி விட்டு இதில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு – 1/2 ஸ்பூன், சர்க்கரை – 2 ஸ்பூன், போட்டு நன்றாக 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, அடுப்பை அணைத்து விடுங்கள். இதில் இறுதியாக எலுமிச்சை பழச்சாறு 1 ஸ்பூன் ஊற்றி கலந்து விட வேண்டும்.

நாம் தயார் செய்த இந்த தாளிப்பு தண்ணீரை அப்படியே தயாராக இருக்கும் டோக்க்லாவின் மேல் ஊற்றினால், டோக்ளா இதை உறிஞ்சிக்கொள்ளும். மேலே துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, அலங்கரித்து அப்படியே சாப்பிட்டு பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: 5 நிமிஷத்துல வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் சேர்க்காமல் காரசாரமான இந்த சட்னியை செய்து பாருங்க. இனி இட்லி,தோசை செய்தாலே இந்த சட்னி தான் செய்விங்க. டேஸ்ட் வேற லெவல் இருக்கும்.

இனிப்பு, புளிப்பு, உப்பு சேர்ந்த கலவையில் ஒரு சேட் ஐட்டம் தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப வித்தியாசமான சுவையில் கிடைக்கும்.

- Advertisement -