5 நிமிஷத்துல வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் சேர்க்காமல் காரசாரமான இந்த சட்னியை செய்து பாருங்க. இனி இட்லி,தோசை செய்தாலே இந்த சட்னி தான் செய்விங்க. டேஸ்ட் வேற லெவல் இருக்கும்.

- Advertisement -

சட்னி அரைக்க ஒன்று தேங்காய் பயன்படுத்துவோம் அல்லது தேங்காய் சேர்க்காமல் அதற்கு பதில் வெங்காயம் அல்லது வெங்காயம், தக்காளி வதக்கி அரைக்கும் சட்னி இப்படி வித விதமாக செய்வோம். ஆனால் தேங்காய்,வெங்காயம்,தக்காளி எதையும் சேர்க்காமல் ரொம்பவே வித்தியாசமாக அதே நேரத்தில் ரொம்பவே அட்டகாசமான சுவையில் இந்த சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. வாங்க இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த சட்னியை எப்படி அரைக்கிறது தெரிஞ்சுக்கலாம்.

செய்முறை

இந்த சட்னி அரைக்க முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடு படுத்தி கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் இந்த சட்னிக்கு நல்ல ஒரு சுவையை கொடுக்கும். தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் வேறு எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எண்ணெய் சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து கொள்ளுங்கள். அத்துடன் கால் கப் காய்ந்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் வறுத்த வேர்க்கடலை இருந்தால் உளுந்து பாதி வரை வறுபட்டவுடன் இந்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

உளுந்து, வேர்க்கடலை இவை இரண்டும் சிவந்து வந்தவுடன் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு இவை இரண்டையும் சேர்த்த பிறகு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கருகி விடாமல் வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடைசியாக ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து வடிகட்டி அந்த தண்ணீரையும் இதில் சேர்த்து நன்றாக சுண்டி வரும் வரை வதக்கி விடுங்கள். இப்படி வதக்கும் போது இதில் இருக்கும் பச்சை வாடை அனைத்தும் போய் விடும்.

இதையெல்லாம் வதங்கி வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஆற வைத்துக் கொள்ளுங்கள். இது ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சட்னி வதக்கிய கடாயில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அந்த தண்ணீரை இதில் ஊற்றி சட்னியை நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து சின்ன தாளிப்பு கரண்டி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு சேர்த்து பொரிந்தவுடன் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்து கலந்து விடுங்கள். வேர்க்கடலை சட்னி வித்தியாசமான சுவையில் அட்டகாசமாக தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கு மசாலா வறுவல் இப்படி செஞ்சு பாருங்க எல்லா வகையான வெரைட்டி ரைஸ்க்கும், சாதத்துக்கும் கூட செம டேஸ்டியாக இருக்குமே!

சுட சுட இட்லி, தோசையுடன் இந்த சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள். எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் உள்ளே போகும். நீங்களும் ஒரு முறை இந்த சட்னி ரெசிபியும் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா மறுபடியும் ட்ரை பண்ணுங்க.

- Advertisement -