ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததுக்கு காரணம் தோனி தான் என்று சில ரசிகர்கள் கூறிவந்தாலும், அந்த போட்டியில் தோனி தோல்விக்கு காரணம் அல்ல சரியான பாட்னர்ஷிப் அமையாததும், கடைசி ஓவர் பவுலிங் சரியாக இல்லாததுமே என்று பல தரப்புகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி இன்னும் சில மணி நேரத்தில் பெங்களூரு நகரில் துவங்க உள்ளது. இந்நிலையில் தோனியின் ஆட்டம் பற்றி விமர்சித்தவர்களுக்கு தோனியின் ரசிகர்கள் கடந்த போட்டியில் தோனி செயல்பட்ட விதம் குறித்து ஒரு விடீயோவினை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்கண்டே பந்தை கணிக்க முடியாமல் பந்தை விட்டுவிடுகிறார். ஆனால், தோனி அந்த பந்து இந்த திசை நோக்கி தான் வரும் என்று முன்கூட்டியே கணித்து அந்த இடத்திற்கு சென்றார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :
ஒரு போட்டியில் நல்லா விளையாடினால் தோனியை கொண்டாடுவதும், ஒரு போட்டியில் சோபிக்க தவறினால் அவரை தூற்றுவதும் சாதாரணமாக நடந்துகொண்டுதான் வருகிறது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்