
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரங்களும் அந்த மாதத்தை சிறப்பான மாதமாக மாற்ற உதவும். அதே போல் தான் ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் அந்த மாதத்தில் நமக்கு ஏற்பட்ட தோஷத்தில் இருந்தும் கண் திருஷ்டியில் இருந்தும் வெளிவர உதவி செய்யும். அந்த வகையில் சித்திரை மாதத்தின் கடைசி நாளன்று கல் உப்பை வைத்து செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சித்திரை மாதத்தின் கடைசி நாள் மே மாதத்தின் 14ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்களையும், எதிர்மறை ஆற்றலையும், கண் திருஷ்டியையும் நீக்கும். மேலும் பிறக்கின்ற புதிய மாதம் சிறப்பான மாதமாக அமையும். அப்படிப்பட்ட தோஷங்களையும், எதிர்மறை ஆற்றலையும், கண் திருஷ்டியையும் நீக்குவதற்கு கல் உப்பை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை சித்திரை மாதத்தின் கடைசி நாளான மே மாதம் 14ஆம் தேதி இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் நிறைவு செய்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இதற்கு முதலில் ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பரில் பின்வரும் இந்த மந்திரத்தை 5 முறை உங்களுடைய இடது கையால் எழுத வேண்டும்.
பிறகு இரண்டு கைகளிலும் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு விதம் எடுத்துக்கொண்டு உங்களுடைய தலையை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் எட்டு முறை சுற்ற வேண்டும். அதாவது வலது கையை வைத்து இடமிருந்து வலமாக எட்டு முறையும், இடது கையை வைத்து வலமிருந்து இடமாக எட்டு முறையும் சுற்றிவிட்டு கைகளில் இருக்கக்கூடிய கல் உப்பை ஓடுகின்ற தண்ணீரில் போடலாம் அல்லது வீட்டில் இருக்கக்கூடிய வாஷ்பேஷனில் போட்டு கரைத்து விடலாம். பிறகு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு எடுத்து ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து அந்த தண்ணீரால் குளித்துவிட்டு நெற்றி நிறைய விபூதியை பூசி படுக்கச் செல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய தோஷங்களும், எதிர்மறை ஆற்றல்களும், கண்திருஷ்டிகளும் விலகும்.
“ஓம் ரிங் வசி வசி”
இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளும் தீய சக்திகளும் விலக
யார் ஒருவர் இந்த கல்லுப்பு பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் சித்திரை மாதத்தின் கடைசி நாள் அன்று செய்கிறார்களோ அவர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் தோஷங்களும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.