- Advertisement -
வீட்டு குறிப்புகள்

கை வலிக்காமல் மிதியடிகளை துவைப்பதற்கு இப்படியும் ஒரு ஐடியா இருக்கு. ஒரு மாதம் துவைக்காத மிதியடியை கூட ஈஸியா சுத்தம் செய்ய 1 மூடி இந்த லிக்விட் இருந்தால் போதும்.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய மிக மிக கஷ்டமான வேலைகளில் ஒன்று இந்த மிதியடிகளை துவைப்பது. இல்லத்தரசிகளுக்கு தான் தெரியும் அந்த மிதியடிகளை அழுக்கு போக துவைப்பது எவ்வளவு கடினம் என்பது. பிரஷ் சோப்பு போட்டு தேய்த்து கை, கழுத்து வலி வந்துவிடும். சுலபமாக மிதியடிகளை துவைக்க சூப்பரான ஒரு ஐடியாவை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு மூடி இந்த லிக்விடை ஊற்றி ஊற வைத்தால் உங்களுடைய துவைக்காத அழுக்கான மிதியடி கூட புதுசு போல மாறிவிடும்.

ஒரு பக்கெட் எடுத்துக்கோங்க. அதில் தேவையான அளவு சுடுதண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் லைசால் 1 மூடி, துணி துவைக்கும் சோடா 2  ஸ்பூன், துணி துவைக்கும் பவுடர் 2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு ஒரு குச்சி விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். துணி துவைக்கும் சோடாவும், துணி துவைக்கும் பவுடரும் தண்ணீரில் நன்றாக கரைந்த பின்பு மிதியடிகளை எடுத்து இதில் ஊற வையுங்கள். நான்கு மேட் துவைக்க மேலே சொன்ன அளவுகள் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் மேட்டுகளுக்கு ஏற்ப நீங்கள் இதில் சேர்க்கும் பொருட்களை கூடவோ குறைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். (லைசால் மிஸ் பண்ணவே கூடாது. லைசால் தான் அழுக்கை முற்றிலுமாக நீக்குவதற்கு உதவியாக இருக்கும். எந்த நிறத்தில் இருக்கும் லைசாலையும் பயன்படுத்தலாம்.)

- Advertisement -

இந்த தண்ணீரில் மேட் குறைந்தது 5 மணி நேரமாவது கட்டாயம் ஊற வேண்டும். அதிகபட்சம் ஒரு இரவு கூட ஊறினால் தவறு கிடையாது. இந்த தண்ணீரில் அழுக்கான மிதியடிகள் ஊறும்போதே அதிலிருந்து அழுக்கு மொத்தமும், அந்த தண்ணீரில் இறங்கி விடும். அதன் பின்பு தண்ணீரிலிருந்து மேட்டை வெளியே எடுத்து விடுங்கள். அழுக்கான தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள்.

மீண்டும் புதிய தண்ணீரில் மேட்டை ஒரு முறை போட்டு நன்றாக அலசி எடுக்க வேண்டும். 2வது முறை நல்ல தண்ணீரில் மேட்டை போட்டு, அந்த மிதியடிக்கு மேலே நீங்கள் ஏறி நின்று உங்களுடைய இரண்டு கால்களையும் போட்டு மிதித்தாலே அழுக்கு மொத்தமும் நீங்கிவிடும்.

- Advertisement -

மீண்டும் ஒருமுறை தண்ணீரில் அலசி அப்படியே நல்ல வெயிலில் காய வைக்கலாம். இது ஒரு முறை. இது அல்லாமல் இந்த மேட்டை வாஷிங்மெஷினிலும் போட்டு துவைக்கலாம். சுடுதண்ணீரில் 5 மணி நேரம் ஊறிய மேட்டை இரண்டு முறை தண்ணீரில் அலசி விடுங்கள். அதில் இருக்கும் அழுக்கு மண்ணு மொத்தமும் நீங்கி விடும். பிறகு அந்த மிதியடிகளை வாஷிங்மெஷினில் போட்டு கொஞ்சமாக லிக்விட் ஊற்றி மினிமம் உங்கள் வாஷிங்மெஷினை எவ்வளவு நேரம் வைக்க முடியுமோ, 30 நிமிடம் வைத்தால் கூட போதுமானது தான். ஒருமுறை அலசி பிழிந்து எடுத்தால் மேட் புத்தம் புதிய பொலிவோடு உங்களுக்கு மீண்டும் கிடைத்துவிடும்.

சில பேருக்கு வாஷிங்மெஷினில் போட பிடிக்காது என்றால் மேலே சொன்ன முறைப்படி கையிலேயே துவைத்துக் கொள்ளுங்கள். வாஷிங்மெஷினில் மேட்டை போட்டு விட்டு அதன் பின்பு வெறும் தண்ணீரை கொஞ்சம் வாஷிங்மெஷினில் எடுத்து, ஒரு முறை வாஷிங்மெஷினை வெறுமனே ஓடவிட்டு கூட தண்ணீரை வெளியேற்றி விடலாம். அப்போது வாஷிங்மெஷினில் மிதியடியில் இருந்த அழுக்கு மிச்சம் மீதி ஒட்டி இருந்தால் கூட அது நீங்கிவிடும். லைசாலுக்கு விடாப்படியான கறையை கூட சுத்தமாக நீக்கக்கூடிய சக்தி இருக்கிறது. இந்த குறிப்பை ஒரே முறை முயற்சி செய்து பாருங்கள். உங்க வேலை கொஞ்சம் சுலபமாகும்.

- Advertisement -