- Advertisement -
மந்திரம்

துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜையறையில் தினம் தோறும் ஒலிக்கக் கூடிய மந்திரங்கள் மற்றும் பாடல்கள் என்னென்ன?

- Advertisement -

பொதுவாகவே பெண்கள் தங்கள் வீட்டு பூஜை அறையை கோவிலாக நினைத்து, பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களை, கர்ப்பக்கிரகத்தில் குடியிருக்கும் சிலைகளாக பாவித்து தான் வழிபாடு செய்வார்கள். அந்த வரிசையில், ஸ்டாலின் அவர்களின் மனைவியான துர்கா ஸ்டாலின் அவர்கள் தன் வீட்டு பூஜை அறையில் தினம் தோறும் எந்த பாடல்களை ஒலிக்கவிட்டு இறை வழிபாடு செய்வார்கள் என்பதைப் பற்றியும், துர்கா ஸ்டாலின் அவர்களே, எந்தெந்த மந்திரங்களை மனதார தன் வாயால் உச்சரித்து, எந்தெந்த தெய்வங்களை எப்படி வழிபாடு செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எந்தெந்த கிழமையில் எந்தெந்த தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டுமோ, அந்தந்த கிழமையில் அந்தந்த தெய்வங்களுடைய பாடல்கள் இவர்கள் வீட்டு பூஜை அறையில் கட்டாயம் ஒலிக்கும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று சஷ்டி கவசமும், திங்கட்கிழமை அன்று சிவபுராணமும், வெள்ளிக்கிழமையில் லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமமும் நிச்சயம் ஸ்டாலின் அவர்களுடைய வீட்டில் ஒலிக்கும்.

- Advertisement -

ஸ்டாலின் அவர்களுடைய வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக்கூடிய தெய்வங்களின் திரு உருவ சிலைகளில், அவர்களுக்கு அன்பளிப்பாக வந்த தெய்வங்களின் திரு உருவப் படங்களும் சிலைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. யாராவது ஸ்டாலின் அவர்களுக்கு, அன்போடு பிரத்தியேகமாக தெய்வங்களின் சிலையையோ, திருவுருவப் படத்தையோ பரிசாகக் கொடுத்தால் அந்தப் படத்தை இவர்கள் தன் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்கிறார்கள்.

இவர்களுடைய வீட்டு குல தெய்வம் அங்காள அம்மன் என்பதால் தினம்தோறும் குல தெய்வ வழிபாட்டையும் பூஜை அறையில் தவறாமல் மேற்கொள்வது துர்கா அவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை அடுத்து ஹனுமன், சிவன், சாய்பாபா, அன்னபூரணி, ராமர் லட்சுமணர் சிலை என்று இவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெரும்பாலான சிலைகள், இவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது தான்.

- Advertisement -

இறைவழிபாட்டுடன் சேர்த்து இவர்கள் தங்களுடைய முன்னோர்களது வழிபாட்டையும் செய்வதற்கு மறப்பது கிடையாது. இவர்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு பக்கத்தில் தங்களுடைய முன்னோர்களின் திருவுருவப் படத்தை மாட்டி வைத்து பூஜையின் இறுதியில் அவர்களையும் வணங்குவது துர்கா ஸ்டாலின் அவர்களின் வழக்கம். மறைந்த முன்னோர்களின் திருஉருவ படங்களின் வரிசையில் கலைஞர் அவர்களின் படமும் இருக்கின்றது.

துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு தினம் தோறும் பூஜை அறையில் அமர்ந்து பெரிய பெரிய மந்திரங்களை உச்சரிப்பதற்க்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் தினம்தோறும் அவர்கள் இறைவழிபாடு செய்யும் போது குறிப்பிட்ட சில தெய்வங்களுக்கு மட்டும், அந்தந்த கிழமைகளில் அந்தந்த தெய்வங்களுக்குரிய சில மந்திரங்களை உச்சரித்து இறை வழிபாடு செய்வதை தன்னுடைய வழக்கமாக கொண்டுள்ளார்கள். துர்கா ஸ்டாலின் அவர்கள் விரும்பி உச்சரிக்கும் அந்த மந்திரங்கள் என்னென்ன நாமும் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சாய்பாபா:
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்தவாக்கிய வர்சாய்
சகல லோக பூஜிதாய
சர்ப்வதோச நிவாரணநாய

ஷீர்டிவாசாய
சாயி நாதாயதே நமஹ

ஓம் சாயி நமோ நமஹ
ஸ்ரீ சாயி நமோ நமஹ
ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ
சத்குரு சாயி நமோ நமஹ

ஓம் சாய் நாதாய வித்மஹே
ஷிர்டிவாசாய தீமஹி
தந்நோ சாயி ப்ரசோதயாத்.

ஹனுமன்:
அசாத்ய சாதக ஸ்வாமிந்
அசாத்யம் தவகிம்வத
ராம தூத க்ருபாசிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ

பெருமாள்:
ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே
ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே

சிவன்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

இப்படியாக சாய்பாபா ஹனுமன் பெருமாள் சிவன் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் உண்டான மந்திரத்தை பூஜை அறையில் தினம்தோறும் தன்னுடைய வாயால் உச்சரித்து, தீபமேற்றி வழிபாடு செய்வது துர்கா ஸ்டாலின் அவர்களின் வழக்கம் என்று, Nayaki TV என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டியில் துர்கா ஸ்டாலின் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள் என்பதையும் பதிவு செய்து கொண்டு, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -