- Advertisement -
சமையல் குறிப்புகள்

சப்பாத்திக்கு தொட்டுக்க எக் கீமா செய்ய தெரியுமா உங்களுக்கு? இது ரொம்ப ரொம்ப ஈஸிங்க, ரொம்ப ரொம்ப டேஸ்டியும் கூட. முட்டை பிரியர்களுக்காக இந்த ரெசிபி.

- Advertisement -

சுலபமாக வீட்டில் இருப்பவர்கள் சமைக்கக்கூடிய ஒரு உணவு என்றால் அது முட்டை. நிறைய பேருக்கு இது பிடித்த உணவுப் பொருள் என்று கூட சொல்லலாம். இந்த முட்டையை வைத்து விதவிதமாக சமைக்கலாம். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி முட்டை கீமா. இதை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சைடிஷ் ஆக செய்தால் ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கும். முட்டை வாசம் பிடிக்கும், முட்டை பிடிக்கும் என்பவர்கள் மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். முட்டையில் லேசாக வாடை வீசினாலே எனக்கு பிடிக்காதுபா. அப்படி என்று சொல்பவர்கள் இந்த ரெசிபியை டிரா பண்ணி பார்க்காதீங்க. ஆசை ஆசையாய் நிறைய முட்டை சாப்பிடுபவர்களுக்கு இந்த சமையல் குறிப்பு.

செய்முறை

இதற்கு நமக்கு வேகவைத்த ஐந்து முட்டைகள் தேவை. எப்போதும் போல முட்டையை தண்ணீரில் போட்டு, உப்பு போட்டு வேகவைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த முட்டை நன்றாக ஆறி வந்ததும் அதை துருவிக் கொள்ள வேண்டும். தேவை என்றால் மிகப் பொடியாக நறுக்கியும் வைத்துக் கொள்ளுங்கள். கேரட் துருவல் இருக்கும் அல்லவா அதில் துருவி வைத்துக் கொண்டால் போதும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், ஊற்றிக் கொள்ளவும். மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கி வரட்டும். இதற்குள் இதோடு நறுக்கிய பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை 1 கொத்து, போட்டுக்கோங்க. வெங்காயம் நன்றாக வதங்கி வந்த உடன் இஞ்சி பூண்டு விழுது 2 இரண்டு டேபிள் ஸ்பூன், போட்டு அதனுடைய பச்சை வாடை போக வதக்கவும்.

அடுத்தபடியாக மிகப் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்களை போட்டு கண்ணுக்கே தெரியாமல் வதக்கி விடவும். மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், கரம் மசாலா 1/2 ஸ்பூன் போட்டு இந்த மசாலாவை மூன்று நிமிடம் எண்ணெயிலேயே வதக்குங்க. எண்ணெய் பிரிந்து லேசாக வர தொடங்கும். அப்போது தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீரை ஊற்றி இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

பிறகு துருவி வைத்திருக்கும் முட்டையை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொடுங்கள். முட்டை இரண்டு கொதி வந்ததும் இறுதியாக 1 டேபிள் ஸ்பூன் அளவு மிளகுத்தூள் தூவி, மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை 1 கைப்பிடி தூவி, கலந்து விட்டு அடுப்பை அடுப்பை அணைத்தால் சூப்பரான முட்டை கீமா தயார்.

இதையும் படிக்கலாமே: கீரை வாங்கினா ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சைவ பிரியர்கள் மட்டுமல்ல இனி அசைவ பிரியர்கள் கூட இந்த கீரையின் சுவைக்கு அடிமை தான்.

இதில் நாம் முட்டையை வேகவைத்து துருவி சேர்த்து இருப்பதால் லேசாக முட்டை வாசனை இருக்கும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் கரம் மசாலா, பச்சை மிளகாய், கருவேப்பிலை வாசனை நாம் சேர்த்திருக்கும் மிளகுத்தூள் வாசனை இந்த முட்டைக்கு கூடுதல் ருசியை கொடுக்கும். அதுதாங்க முன்னாடியே சொன்னோம். முட்டை பிரியர்கள் மட்டும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. சுட சுட சப்பாத்திக்கு சுட சுட முட்டை கீமா சூப்பரான சைட் டிஷ். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -