கீரை வாங்கினா ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சைவ பிரியர்கள் மட்டுமல்ல இனி அசைவ பிரியர்கள் கூட இந்த கீரையின் சுவைக்கு அடிமை தான்.

keerai recipe
- Advertisement -

கீரையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக குழந்தைகள் கீரையில் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பெரியவர்கள் கூட சைவம் சாப்பிடுபவர்கள் கீரையை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் கீரை என்றாலே ஏதோ சாப்பிடக் கூடாத பொருளை சாப்பிடுவது போல தான் முகத்தை சுழிப்பார்கள். இது போல ஒரு முறை கீரையில் தொக்கு செய்து கொடுத்துப் பாருங்க எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

செய்முறை

இந்த கீரை தொக்கு செய்ய முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன் இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை கொஞ்சம் பெரிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து இத்துடன் 15 பல் பூண்டு ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறியவுடன் இரண்டு மீடியம் சைஸ் தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு எலுமிச்சை பழ அளவு புளி, ஐந்து காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து தக்காளி பாதி அளவு வேகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் ஓரளவுக்கு வதங்கிய பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கீரையை சுத்தம் செய்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கீரையை வதக்கிய வெங்காயம் தக்காளியுடன் சேர்த்த பிறகு ஒரு முறை கலந்து விட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக விட்டால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது வேக வைத்த கீரையை மிக்ஸியில் அரைப்பது என்றால் ஒரே ஒரு முறை மட்டும் பல்ஸ் மோடில் விட்டு எடுத்து விடுங்கள். இந்த கீரை கொரகொரப்பாகத் தான் அரைக்க வேண்டும். உங்களிடம் கல் சிட்டி இருந்தால் அதில் சேர்த்து கடைந்து கொள்ளுங்கள். இதன் சுவை இன்னுமே கூட நன்றாகவே இருக்கும்.

- Advertisement -

மீண்டும் அடுப்பில் அதே பேனை வைத்து அரைத்த கீரையை அதில் சேர்த்து கொதிக்க விடுங்கள். இன்னொரு பக்கம் சிறிய தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலையும் சேர்த்து கால் டீஸ்பூன் பெருங்காயம் அனைத்தையும் சேர்த்த இந்த தாளிப்பை கீரையில் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உளுந்து வடை சாப்பிடணும்னு ஆசைப்பட்ட ஊற வைச்சி அரைச்சு டைம் வேஸ்ட் பண்ணாம இப்படி சட்ன்னு செஞ்சு சாப்பிடுங்க. திடீரென வீட்டிற்கு விருந்தாளி வந்து விட்டால் சமாளிப்பதற்காகவே ஒரு சூப்பர்ரான வடை ரெசிபி.

ஒரு முறை இந்த கீரையை செஞ்சு சாப்பிட்டீங்கன்னா இனி எப்போ கீரை வாங்கினாலும் இது போல தான் செய்வீங்க அந்த அளவுக்கு சுவைய அட்டகாசமா இருக்கும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -