
இப்போதெல்லாம் ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்ந்து விட்டால் போதும். அதை பார்த்து பொறாமை பட்டு அவருடைய முன்னேற்றத்தை தடுக்க பல பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். இப்படியான செயல்கள் நிகழாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். அது வீடாக இருக்கலாம் அல்லது பணிபுரியும் இடம் வியாபாரம் செய்யும் இடம் என அனைத்து இடத்திலும் இந்த பிரச்சனை இருக்க தான் செய்கிறது.
இப்படி நம்மை வாழவே கூடாது என்று நினைப்பவர்கள் மத்தியில் நன்றாக வாழ நம்முடைய தைரியம் தன்னம்பிக்கையுடன் தெய்வ அனுகிரகம் கட்டாயமாக தேவை அத்தகைய அனுகிரகத்தை தரக்கூடிய தெய்வ வழிபாட்டையும் அதற்குரிய முறைகளைப் பற்றியும் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
எதிரிகளின் தொல்லைகள் இருந்து நம்மை காக்கக் கூடிய அற்புதமான தெய்வங்கள் இரண்டு பேர் ஒன்று ஆஞ்சநேயர் மற்றொருவர் பைரவர். முதலில் ஆஞ்சநேயரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் ஆஞ்சநேயருக்கு உகந்த நாள் எதிர்பார்த்தால் அது அஸ்வினி அல்லது மூல நட்சத்திரம்.
இந்த இரண்டு தினங்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்த நம்முடைய எதிரி தொல்லை மட்டும் இன்றி அனைத்து விதமான தொல்லைகளும் தீரும் என்று சொல்லப்படுகிறது. இந்த வெற்றிலையானது 27,54,108 என்ற எண்ணிக்கையில் மாலையாக தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டும். அதே போல் சனிக்கிழமைகளில் தொடர்ந்து இந்த வழிபாடு செய்யலாம்.
அடுத்ததாக ஈசனுக்குள்ள சக்தியைப் பெற்ற கால பைரவர். இவரை வழிபடும் பொழுதும் நாம் அனைத்து துன்பத்திலிருந்தும் விடுப்படலாம். குறிப்பாக இந்த எதிரி தொல்லைகள். பைரவரை நாம் அவருக்கான அஷ்டமி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை நேரத்தில் வணங்கலாம். இந்த நேரத்தில் பைரவர் ஆலயத்திற்கு சென்று தீபமிற்றி பைரவ அஷ்டோத்திரத்தை படிப்பது நல்ல பலனைத் தரும்.
இதை செய்ய முடியாதவர்கள் தினமும் வீட்டில் பைரவரை நினைத்து ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைத்து அதன் முன்பாக அமர்ந்து பகிரக அஷ்டோத்திரத்தை படிக்கும் போது எந்த எதிரியும் உங்கள் முன் நிற்கவே பயப்படுவார்கள். அது மட்டும் இன்றி எந்த விதமான தீய செயல்களை உங்களுக்கு எதிராக செய்திருந்தாலும் அது பலன் அளிக்காது என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: தனவசிய மந்திரம்
இந்தக் காலக்கட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையான இந்த எதிரிகளின் தொல்லையிலிருந்து நிம்மதியாக வாழ இந்த இரண்டு தெய்வ வழிபாடுகள் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாடுகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.