தனவசிய மந்திரம்

varahi amman om
- Advertisement -

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி கடினமாக உழைத்து செல்வ செழிப்பை ஏற்படுத்தினாலும் அந்த செல்வ செழிப்பு நம்முடனே நிரந்தரமாக நிலையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்திலோ அல்லது நம்முடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காத பட்சத்திலோ, பண வசியமோ தன வசியமோ இல்லை என்று அர்த்தம். அப்படிப்பட்ட தன வசியத்தை ஏற்படுத்துவதற்கு வாராகி அம்மனுக்குரிய மந்திரத்தை எந்த முறையில் கூறி வழிபட வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வராஹி அம்மன் தனவசிய மந்திரம்

அஷ்ட லட்சுமிகளின் அருள் இருந்தால் அனைத்து விதமான செல்வங்களையும் நம்மால் பெற முடியும். இந்த அஷ்டலட்சுமிகளுக்கும் செல்வத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர்கள் தான் பைரவரும், வராகி அம்மனும். அஷ்டமி தினத்தன்று அஷ்டலஷ்மிகளும் பைரவரையும், வராகி அம்மனையும் வழிபட்டு தான் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறுகிறார்கள் என்று புராணங்கள் கூறுகிறது.

- Advertisement -

அதனால்தான் அன்றைய தினத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அந்த காரியத்தில் லட்சுமியின் அருள் நமக்கு கிடைக்காது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அஷ்டலஷ்மிகளுக்கு ஐஸ்வர்யத்தை வாரி வழங்கும் வராகி அம்மனை தன வசியம் ஏற்படுவதற்காக எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

வராகி அம்மனுக்குரிய தினமான பஞ்சமி தினத்தன்று இந்த வழிபாட்டை நாம் ஆரம்பிக்கலாம். இந்த மந்திரத்தை தினமும் தொடர்ந்து காலையில் பிரம்ம முகூர்த்த வேளையிலோ அல்லது இரவு 8 மணிக்கு மேலோ உச்சரிக்கலாம். முடிந்த அளவு பிரம்ம முகூர்த்த வேளையில் உச்சரிக்க பழகிக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வராகி அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து அந்த அகல்விளத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

அப்படி கூறும் பொழுது நம்முடைய கையில் குபேர முத்திரையை வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து மீதமிருக்கும் இரண்டு விரல்களையும் மடக்கி வைப்பது தான் குபேர முத்திரை. இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை நாம் மனதாக வராகி அன்னையை நினைத்து உச்சரிக்க வேண்டும்.

இப்படி உச்சரிப்பதன் மூலம் வராகி அம்மனின் அருளால் நமக்கு தனவசியம் ஏற்படும். நம் வாழ்வில் எந்தவித குறையும் இருக்காது. செல்வ செழிப்புடன் வாழ முடியும். பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வராகி தேவியே நம
க்லீம் வராஹமுகி ஹ்ரீம் சித்தி ஸ்வரூபினி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வசிய வசிய ஸ்வாகா

இதையும் படிக்கலாமே: துர்க்கை அம்மனுக்கு நெல்லிக்காய் மாலை

இந்த எளிமையான மந்திரத்தை வராகி அம்மனை முழுமனதுடன் நம்பி தினமும் உச்சரிப்பவர்களுடைய வாழ்க்கையில் படிப்படியாக பணவரவு அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் தீர ஆரம்பிக்கும்

- Advertisement -