- Advertisement -

இன்று பல பேர் தங்களின் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சனை ஏமாந்து போவது. ஏமாற்றம் என்றால் அது பலவகையில் இருக்கும். குறிப்பாக பண விஷயத்தில் ஏமாறுவது இன்றைய காலத்தில் பெருமளவு நடக்கிறது. இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து போனதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். நமக்கு வேண்டியவர்களோ உறவினர்களோ தேவைக்கு நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு மறுபடியும் திருப்பித் தருவதை பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.

ஒரு வேளை நாமாக சென்று கேட்டாலும் விரோதத்தை தான் வளர்த்துக் கொள்வார்கள் இப்படியான சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் பலரும் புலம்புவது இயல்பாகி விட்டது. இப்படி நம்பிக் கொடுத்து ஏமாந்த பணம் நம்மை வந்து அடைய செய்யக் கூடிய எளிமையான ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

ஏமார்ந்த பணம் கைக்கு வர

இந்த பரிகாரத்தை இரண்டு முறைகளுக்கு பயன்படுத்தலாம் ஒன்று நீங்கள் பிறருக்கு கொடுத்து ஏமாந்த பணம் மீண்டும் உங்களை வந்தடையவும் செய்யலாம். ஒரு வேளை நீங்கள் வேறு ஏதேனும் வேலை செய்து உங்களுக்கு வர வேண்டிய பணம் நிலுவையில் இருக்கும். வெகு நாளாக தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருப்பார்கள் அந்தப் பணம் வரவும் செய்யலாம்.

சிலர் தேவைக்கு பணத்தை ஒரு சில இடங்களில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படியான இடத்தில் இருந்து பணம் உங்களுக்கு விரைவில் கிடைக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவும் பார்க்கத் தேவையில்லை ஏனெனில் இது ஒரு தாந்திரீக பரிகாரம் தான். இதில் எந்த தெய்வ வழிபாடும் இதில் கிடையாது. ஆகையால் உங்களுக்கு உகந்த ஒரு நாளில் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய எதாவது ஒரு ரூபாய் நோட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ரூபாய் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், பத்து ரூபாய் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்துடன் ஒரு வெள்ளை நிற தாளில் யாரிடமிருந்து உங்களுக்கு பணம் வரவேண்டும் எவ்வளவு பணம் வர வேண்டும் என்றும் ஏதாவது ஒரு நபர் ஒரு தொகை மட்டும் அதில் எழுதுங்கள்.

இப்பொழுது ரூபாய் நோட்டு அதன் மீது நீங்கள் எழுதிய வெள்ளை நிறத் தாள் அதன் மீது ஒரு வர மிளகாய் காம்புடன் அப்படியே வைக்க வேண்டும். மூன்றையும் ஒன்றாக சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். பூஜை செய்யும் போதெல்லாம் இதை கையில் வைத்து அந்த பணம் வர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்தப் பரிகாரம் செய்த சில நாட்களுக்குள்ளாகவே உங்களுக்கு வரக் கூடிய பணம் வந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பணம் உங்கள் கைக்கு வந்த பிறகு காய்ந்த மிளகாயும், அந்த வெள்ளை நிற தாளையும் வீட்டிற்கு வெளியே கொண்டு எரித்து விடுங்கள். அந்த நோட்டை ஏதேனும் தர்ம காரியத்திற்கு பயன்படுத்துங்கள். சொந்த செலவிற்கு பயன்படுத்தக் கூடாது.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் வெளியேற மஞ்சள் பரிகாரம்

இழந்த பணம் வரவேண்டிய பணம் அனைத்தையும் திரும்ப பெற மிக மிக எளிமையான இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் செய்து பலன் அடையலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -