- Advertisement -
சமையல் குறிப்புகள்

சத்துக்கள் நிறைந்த அத்திப்பழ அல்வா செய்முறை

- Advertisement -

உணவுப் பொருட்களாகவும் அதேசமயம் மருந்தாகவும் பயன்படக்கூடிய ஒரு அற்புதமான பழம் தான் அத்திப்பழம். அத்திப்பழத்தின் மகத்துவத்தை கூறிக் கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பழங்களில் ஒன்றாக தான் இது திகழ்கிறது. இதை அன்றாடம் உண்ணும் பொழுது நம்முடைய உடல் ஆரோக்கியமாக திகழும். அப்படிப்பட்ட அத்திப்பழத்தை வைத்து எப்படி அல்வா செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

அத்திப்பழத்தை அன்றாடம் காலையில் நாம் உண்ணும் பொழுது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக திகழ்கிறது. மேலும் உடலில் இருக்கக்கூடிய கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற உறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்பட இது உதவுகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் ஜீரணக் கோளாறுகள் அனைத்தையும் நீக்குகிறது. மூல நோய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்குவதற்கு இது உதவி புரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் இரத்த உற்பத்தியில் அதிகரிக்க கூடிய அற்புதமான ஆற்றல்மிக்க பழங்களில் ஒன்றாக இரு திகழ்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • உலர் அத்திப்பழம் – 20
  • பாதாம் பருப்பு – 75 கிராம்
  • சர்க்கரை – 1/2 கப்
  • பால் – 1/4 லிட்டர்
  • நெய் – 5 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் உலர் அத்திப்பழத்தை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கால் லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து அந்த அத்திப்பழத்தில் ஊற்றி விட வேண்டும். இதே போல் பாதாம் பருப்பையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அதில் தண்ணீரை சூடு செய்து ஊற்றி தட்டு போட்டு மூடி வைத்த விட வேண்டும். இவை இரண்டும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வேண்டும்.

அத்திப்பழம் மிருதுவாக ஆன பிறகு அத்திப்பழத்தை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நைசாக அரைந்த பிறகு அத்திப்பழம் ஊறிய அந்த பாலையும் அதில் ஊற்றி அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஊறிய பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு ஐந்து பாதாம் பருப்புகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு அடி கனமான அகலமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகிய பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் அத்திப்பழம் விழுதையும் பாதாம் பருப்பையும் சேர்த்து குறைந்தது பத்து நிமிடமாவது நன்றாக கிளற வேண்டும். இவை இரண்டும் நன்றாக கலந்த பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.

இந்த அத்திப்பழ விழுது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்திற்கு வந்த பிறகு அதில் நாம் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்றாக கிளற வேண்டும். அல்வாவில் இருந்து நெய் தனியாக பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

நெய் பிரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை ஒரு கிண்ணத்தில் மாற்றிய அதற்கு மேல் நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் பாதாம்பருப்பை நான்கைந்து துண்டுகளாக நறுக்கி தூவி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் சத்து மிகுந்த அத்திப்பழ அல்வா தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கசப்பே தெரியாத பாகற்காய் வடை செய்முறை

அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த முறையில் அத்திப்பழ அல்வாவை செய்து கொடுப்பதன் மூலம் அத்திப்பழத்தின் சத்துகளோடு சேர்த்து பாதாம் மற்றும் நெய்யின் முழு பலனையும் பெற முடியும்

- Advertisement -