
முகம் ஒரு நிறம், கை கால்கள் ஒரு நிறம், கழுத்து ஒரு நிறம், என்று சில பேருக்கு உடல் முழுவதும் ஒவ்வொரு நிறமாக தெரியும். உங்களுடைய உடல் முழுவதும் ஒரே கலராக மாற, வெள்ளையாக மாற, இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். ஒருமுறை இந்த பேக்கை உடம்பு முழுவதும் போட்டுவிட்டு நன்றாக ஸ்கிரப் செய்து, 10 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு குளித்தால் நீங்கள் அப்படியே வெள்ளையாக மாறிவிடுவீர்கள். அதாவது உங்களுக்கு இருக்கும் ஸ்கின் டோன், நிச்சயமாக ஒரு படி மேலே உயர்ந்திருக்கும். அந்த அளவிற்கு நல்ல ரிசல்ட் கொடுக்கக்கூடிய பேக் தான் இது. சுலபமாக எல்லோராலும் இந்த பேக்கை தயார் செய்து விட முடியும்.
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இன்ஸ்டன்ட் காப்பி தூள் – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், கடலை மாவு – 2 ஸ்பூன், முல்தானி மெட்டி – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை பேக் போல கலப்பதற்கு நாம் நம்முடைய விருப்பம் போல ஏதாவது ஒரு பொருளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பால், தயிர், ரோஸ் வாட்டர், கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், உருளைக்கிழங்கு ஜூஸ், என்று உங்கள் விருப்பம் போல உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ உங்கள் சருமத்திற்கு எது செட் ஆகுமோ, அதை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இது நமக்கு பேக் போல கிடைத்துவிடும். இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் போடலாம். அந்த அளவுக்கு தான் நமக்கு கொஞ்சம் பேக் கிடைத்திருக்கும். மேலே சொன்ன அளவுகள் எல்லாம் குறைந்த அளவில்தான் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு அதிகம் தேவை என்றால் எல்லா பொருட்களையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக சில பேருடைய கை சன் டேன் ஆகி இருக்கும். சில பேருக்கு கால்கள் அதிகமாக கருப்பு நிறமாக மாறி இருக்கும். பின் கழுத்தில் அதிகமாக கருப்பு இருக்கும். அந்த இடத்தில் எல்லாம் கூட இந்த பேக்கை திக்காக போட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் அப்படியே உலர விட்டுவிடுங்கள். பின்பு உங்களுடைய கையில் கொஞ்சம் தண்ணீரை தொட்டுக்கொண்டு ட்ரையான பேக்கை நனைத்து விட்டு, நன்றாக வட்ட வடிவில் இரண்டு நிமிடம் போல மசாஜ் செய்து, வெறும் தண்ணீரை ஊற்றி கழுவி விட வேண்டும். சோப்பு போட்டு குளிக்க கூடாது. இப்படி செய்தால் உங்கள் சரும நிறம் நன்றாக பளிச்சென மாறி இருக்கும்.
தினமும் இந்த பேக்கை போட்டு வர நீங்கள் நிரந்தரமாக வெள்ளை நிறத்திற்கு மாறலாம். எந்த பக்க விளைவுகளும் இந்த பேக்கை போடுவதன் மூலம் ஏற்படாது. சில பேருக்கு ட்ரை ஸ்கின் ஆக இருக்கும். முல்தானி மெட்டியை பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் இருக்கும். ட்ரை ஸ்கின்னாக இருப்பவர்கள் இதில் தயிர் சேர்த்து உங்களுடைய உடம்பில் அப்ளை செய்யலாம். கட்டாயமாக ஸ்கின் ட்ரை ஆவதற்கு வாய்ப்பு கிடையாது.
ஆண்களும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். அவர்கள் மஞ்சளை தவிர்த்து விட்டு மற்ற பொருட்களை எல்லாம் சேர்த்து இந்த பேக்கை போட்டுக்கோங்க. தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது மாநிறமாக இருப்பவர்கள் கூட நல்ல கலராக மாறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.
இந்த குறிப்பை பின்பற்றுவதோடு சேர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகள் பல வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஆப்பிள், பீட்ரூட், கேரட் இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த ஏபிசி ஜூஸ் என்று சொல்வார்கள் அல்லவா அதை குடித்து வந்தால் சருமம் ஜொலி ஜொலிக்க தொடங்கிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.