
அன்றைய காலத்தில் இருந்த பெண்களின் அழகே தனி அழகு தான். அவர்கள் எந்த பியூட்டி பார்லருக்கும் செல்லவில்லை. எந்த மேக்கப் சாதனங்களையும் பயன்படுத்தவில்லை. எந்த கிரீம்களையும் உபயோகப்படுத்தவில்லை. ஆனால் அவர்களின் அழகு வயதான பிறகும் அவர்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட அழகை பெறுவதற்குரிய அற்புதமான ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த பொருளை வாங்கி உபயோகப்படுத்தி அழகாக மாறுவது என்பதை யோசிப்பதை விட நம் முன்னோர்களை பின்பற்றி அவர்கள் செய்யக்கூடிய அழகு குறிப்பை மேற்கொண்டால் அந்த அழகு என்றென்றைக்கும் நிரந்தரமாக நம்மிடம் இருக்கும். அப்படி நம் முன்னோர்கள் செய்த ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவு கடலை மாவு சேர்க்க வேண்டும். பிறகு அதில் கெட்டி தயிர் ஒரு டீஸ்பூன் சேர்க்க வேண்டும். அடுத்ததாக அதில் விட்டமின் இ கேப்சூல் ஒன்று சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை சேர்க்க வேண்டும். வறண்ட சருமம் இருப்பவர்கள் அதில் நான்கு சொட்ட அளவு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இது கஸ்தூரி மஞ்சளாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பாரம்பரியமான ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. மேக்கப் ஏதாவது இருந்தால் அதை நீக்கிவிட வேண்டும். பிறகு முகத்தை நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
முதலில் இந்த பேக்கை சிறிதளவு எடுத்து முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது இரண்டில் இருந்து மூன்று நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்த பிறகு அதற்கு மேலே இதை எடுத்து ஃபேஸ் பேக் போல் தடவி உலர விட வேண்டும். முக்கியமான குறிப்பு இது முழுமையாக காயக்கூடாது. லேசாக ஈரப்பதம் இருக்கும் பொழுதே குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும். முழுமையாக காயும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான ஈரப்பதத்தையும் அவை உறிஞ்சி விடும் என்பதுதான் இதற்கான காரணம்.
எந்த ஃபேஸ் பேக்கையும் முழுமையாக காய விடாமல் லேசாக ஈரம் இருக்கும் பொழுது கழுவி விட்டால் முக சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. முகத்தை கழுவிய பிறகு சிறிது கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து முகத்தில் லேசாக தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் முகத்தின் ஈரத்தன்மையும் எண்ணெய் பசையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். எந்த பேக்கை உபயோகப்படுத்தினாலும் இதையும் பின்பற்றுவது சருமத்தை பாதுகாப்பதற்கு பெரிதும் உதவி புரியும்.
இதையும் படிக்கலாமே: கீழாநெல்லி எண்ணெய்
இந்த எளிமையான வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஃபேஸ் பேக்கை நாமும் பயன்படுத்தி நம் முகத்தை என்றும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.