- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

வீட்டில் செய்யக்கூடிய கோல்டன் பேஷியல்.

- Advertisement -

முகத்தை நிலாவிற்கு ஒப்பிடுவார்கள். காரணம் நிலா பௌர்ணமி நேரங்களில் பிரகாசமாக திகழும் அதேபோல் முகமும் பிரகாசமாக இருக்கும் என்பதால் முகத்தை நிலவிற்கு இணையாக ஒப்பிடுவார்கள். அதேபோல்தான் முகத்தை தங்கத்திற்கு இணையாகவும் ஒப்பிடுவார்கள். காரணம் தங்கம் தகதகவென்று மின்னும் அதே போல் முகமும் மின்னுகிறது என்பதற்காக தான். இந்த மினுமினுப்பை தருவதற்காக பலரும் பியூட்டி பார்லர் சென்று கோல்டன் பேசியல் என்பதை செய்வார்கள்.

இதற்கு அதிகமாக செலவாகும் என்றாலும் அதை செய்து முடித்த பிறகு ஒரு வித ஜொலிப்பு முகத்தில் தெரிகிறது என்பதற்காகவே பலரும் இதை செய்கிறார்கள். இப்படி பியூட்டி பார்லர் சென்று கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே தினமும் இந்த இரண்டு பொருட்களை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால் பியூட்டி பார்லர் போன அளவுக்கு முகம் ஜொலிக்கும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வீட்டிலேயே முகம் தங்கம் போல் தகதகவென்று மின்ன செய்ய வேண்டிய எளிய பேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். இதில் மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பாதாம், பாதாம் நம் உடலுக்கு நல்ல பல சக்திகளை தருவதைப் போலவே அதை முகத்தில் நாம் உபயோகப்படுத்தினால் முகத்திற்கு பல அற்புதமான நல்ல பலன்களை தரக்கூடிய ஒன்று. பாதாமை நாம் பயன்படுத்தும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் மறையும். இளமை தோற்றம் மேலோங்கும். ஒருவித ஜொலிப்பும், பிரகாசமும் தெரியும். முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்கும் என்று பாதாமின் நன்மைகளை நாம் கூறிக் கொண்டே செல்லலாம்.

ஒரு கைப்பிடி அளவு பாதாமை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் நைசாக பொடி செய்யக் கூடாது. ஏனென்றால் பாதாமில் பாதாம் எண்ணெய் இருப்பதால் அதிகமாக அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஓட்டும் பொழுது எண்ணெய் பசை சேர்ந்து கொண்டு பவுடர் பதத்திற்கு வராது. அதனால் ஒன்றிரண்டாக இருப்பது போல் அழைத்துக் கொண்டால் போதும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு கிண்ணத்தில் நம் முகத்திற்கு தேவையான அளவு அதாவது இரண்டு ஸ்பூன் அளவிற்கு பாதாம் பவுடரை போட்டு அதை பேஸ்ட் ஆக மாற்றுவதற்கு தேவையான அளவு தேனை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்த பிறகு அதை அப்படியே விட்டு விட வேண்டும். முகத்தில் போட்ட ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு காய்ச்சாத பசும்பாலை வைத்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் முகத்திற்கு கோல்டன் பேஷியல் செய்தது போன்ற பலன் கிடைக்கும். முகப்பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் இந்த பாதாம் தேனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாற்றையும் கலந்து பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனையும் முழுமையாக நீங்கும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் மங்கு மறைய

அதிகப்படியாக செலவு செய்து கோல்டன் பேஷியல் செய்வதற்கு பதிலாக பாதாமை வைத்து வீட்டிலேயே கோல்டன் பேஷியலை விட அதிக அளவு பிரகாசத்தை நம்மால் பெற முடியும்

- Advertisement -