- Advertisement -
ஆன்மீக குறிப்புகள்

பிரிந்து போன ராகு சூரியனால் அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள்

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். சனிக்குப் பிறகு மெதுவாக நகரக் கூடிய கிரகமாக ராகு பகவான் கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியில் எப்போதுமே பின்னோக்கிய பயணத்தில் இருக்கக் கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் இவருடைய பெயர்ச்சியும் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் தலைமை கிரகமாக விளங்கக் கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய பெயர்ச்சியானது எந்த ராசியில் தன்னுடைய பெயர்ச்சியை செய்கிறாரோ அதில் இருக்கும் கிரகங்களின் பொறுத்து பலன்களை அளிக்க கூடியவர். தற்போது இந்த இரண்டு கிரகங்களும் பிரிந்து வெவ்வேறு ராசியில் பயணிக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக பல ராசிகளுக்கும் சுப பலன்கள் அசுப பலன்கள் என உருவாகியுள்ளது. இது நற்கலன்களை சில குறிப்பிட்ட ராசிகள் மட்டும் தற்போது நற்பலனை அனுபவித்து வருகிறார்கள். அது குரித்தான தகவலை ஜோதிடம் பற்றிய இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

ராகு சூரியன் பிரிவால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

மீன ராசி

ராகு பகவான் தற்போது மீன ராசியில் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ராகு சூரியனும் சேர்க்கை முடிவு பெற்ற காரணத்தினால் மீன ராசியினருக்கு பல நல்ல அதிர்ஷ்டமான யோகங்கள் கிடைக்கப் போகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் உறவினர்களால் லாபம் அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாபாரம் செய்வதற்கு லாபம் அதிகரிக்கும்.

- Advertisement -

கடக ராசி

ராகு மற்றும் சூரியனின் செயற்கை முடிவு பெற்ற காரணத்தினால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகளில் இவர்களும் உண்டு. நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் பணவரவில் குறைவிருக்காது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

மிதுன ராசி

ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை முடிவு பெற்றதால் வெற்றிகளை குவிக்கப் போகும் ராசிகள் இவர்கள். இதுவரை தொழிலில் இருந்து வந்த அனைத்து சிக்கல்களும் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் நல்ல வளர்ச்சியும் சம்பளம் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். பண வரவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதார நிலை மேம்படும்.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

ராகு சூரியன் செயற்கை முடிவு பெற்றதால் அதிர்ஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான். இதிலும் சிறுசிறு மாற்றங்களுக்கு வாய்ப்புண்டு என்ற கருத்தினை கொண்டு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -