- Advertisement -
ஜோதிடம்

கிரக தோஷம் போக்கும் அடை தோசை

- Advertisement -

நவகிரக தோஷம் என்பது கிரகங்களால் உண்டாக கூடியவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறக்கூடிய இந்த கிரகங்களால் நம் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த கிரகங்களால் ஏற்படக் கூடிய மாற்றங்களால் உண்டாக கூடிய விளைவுகளை தான் நாம் கர்ம வினையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம்மை சுற்றி இருக்கும் பிரச்சனைகள் தீர, சனிக் கிழமைகளில் இந்த தோசை சாப்பிடுவது நல்ல பலன் தருமாம். அதைப் பற்றிய சுவாரசியமான ஜோதிடம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமாக இருப்பது நவகிரக ஆதிக்கம். இந்த நவகிரகங்கள் ஆதிக்கம் செலுத்துவதால் தான் நம் வாழ்க்கை சக்கரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. அதை தீர்ப்பதற்கும் அந்த கிரகங்களால் மட்டுமே முடிகிறது.

- Advertisement -

நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் சனி கிரகம் ஆகும். சனி தோஷத்தில் அகப்பட்டு விட்டால் அவ்வளவுதான், ஏழரை வருடம் நமக்கு அதோகதி தான். நம் வினைக்கேற்ற பலன்களை மட்டுமே அனுபவிப்போம். முன் செய்த செயல்களுக்கு உரிய பலன்களை தான் வாழ்க்கையில் அனுபவங்களாக மாறுகிறது. விதியை மதியால் வெல்வது போல, கிரகங்களையும் பரிகாரங்களால் வெல்ல முடியும்.

கிரக ஆதிக்கத்தை குறைக்க, கெட்ட விஷயங்கள் நமக்கு நடக்க இருப்பதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நாம் செய்து பார்க்கலாம். நவகிரகங்களுக்கு உரிய நவதானியங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நவதானியத்தால் அடை தோசையை தயார் செய்யுங்கள். நவதானிய தோசை நவகிரக தோஷங்களையும் போக்கும், ஆரோக்கிய பலத்தையும் கொடுக்கும்.

- Advertisement -

நவதானிய அடை தோசை செய்வது எப்படி:
கோதுமை ,நெல், துவரை, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு ஆகிய ஒன்பது வகையான தானியங்களையும் நவதானியம் என்பர். இந்த நவதானியங்களை நன்கு அலசி சுத்தம் செய்து 5 மணி நேரம் அளவில் நன்கு ஊற வைத்து பின்னர் கிரைண்டரில் போட்டு மைய அரைத்து தோசை மாவு போல தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு மூன்று மணி நேரத்திலேயே புளித்து விடும். அதன் பிறகு நீங்கள் வழக்கம் போல தோசை சுடுவது போல மெலிதாக தோசை சுட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே:
அகத்தியர் சொன்ன முருகன் மந்திரம்

இந்த நவதானிய தோசை தயார் செய்யும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றுவது சனி தோஷங்களை போக்கும். நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு சனிக்கிழமைகளும் நவதானிய அடை தோசையை செய்து சாப்பிட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெள்ளிக் கிழமைகளில் துவரம் பருப்பைக் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட மகாலட்சுமி அருள் கிடைக்கும். அது போல சனிக்கிழமையில் இந்த தோசை செய்து சாப்பிட்டால் நவகிரக அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் கசப்பான உணவுகளை சமைக்காதீர்கள். கசப்பு தரும் பொருட்களை தவிர்த்து, இந்த முறையில் நீங்கள் செய்து சாப்பிடும் பொழுது ஜோதிட ரீதியாக கிரக மாற்றங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளில் இருந்து, பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -