
பாவங்கள் 13 வகைப்படும் என்று கூறப்படுகிறது. அத்தனை பாவங்களிலும் அறியாமல் செய்த பாவங்களும் அடங்கும். ‘என்ன பாவம் செய்தோமோ இந்த பாடு படுகிறோம்’ என்று ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம் வாழ்க்கையில் நினைத்து பார்த்திருப்போம். இப்படி நம்மை அறியாமல் செய்யும் பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்க குரு ஓரையில் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
ஓரை பார்த்து எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பல நூறு மடங்கு நன்மைகளை செய்யும் என்று சாஸ்திரங்கள் வழிவகுத்து கொடுத்திருக்கிறது. ஹோரைகளில் குரு ஹோரை, சுக்ர ஹோரை சிறந்த ஹோரையாக பார்க்கப்படுகிறது. குரு ஹோரையில் செய்யும் விஷயங்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு குரு ஹோரையில் நாம் ஒருவருக்கு அறியாமல் கெடுதல் செய்தால் அது இரட்டிப்பாக சேரும். அதுபோல தான் குரு ஹோரையில் நன்மைகள் செய்தாலும் இரட்டிப்பான பலன்கள் வந்து சேரும்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது போல, குரு ஹோரையில் செய்யும் காரியங்களுக்கும் கோடி நன்மைகள் நம்மை வந்தடையும். தீவினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இந்த பரிகாரத்தை செய்யலாம். குரு ஹோரை எப்பொழுது வருகிறது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அந்த ஓரை கால நேரத்தில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று குரு பகவானுக்கு எலுமிச்சை மாலை ஒன்றை சாற்றி வாருங்கள்.
இந்த பூஜை செய்யும் பொழுது மஞ்சள் நிற உடையை உடுத்திக் கொள்ளுங்கள். மஞ்சள் நிறம் குருவுக்கு உகந்த நிறம் ஆகும். மஞ்சள் நிற பூக்களை அர்ச்சனைக்கு கொண்டு செல்லுங்கள். சாமந்தி பூக்களால் குருவிற்கு அர்சிக்க சுபகாரியங்கள் கைகூடிவரும். பூஜை செய்யும் பொழுது குருவிற்கு குரு அஷ்டோத்திரம் மற்றும் குரு காயத்ரி மந்திரம் போன்றவற்றை உச்சரித்து வழிபட வேண்டும்.
வியாழன் கிழமையில் வரக் கூடிய முதல் குரு ஹோரையில் குரு பூஜை செய்ய ஐஸ்வர்யங்கள் கைகூடி வரும். வியாழன் கிழமையில் காலையில் ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரையில் குரு ஹோரை வரும். இந்த ஹோரை காலத்தில் குரு அஷ்டோத்திரம் அல்லது குரு காயத்ரி மந்திரம் உச்சரித்து வந்தால் தரித்திரங்கள் அனைத்தும் நம்மை விட்டு ஒழியும். இதுவரை அனுபவித்து வந்த துன்பங்கள் யாவும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாமே:
கடன் தீர சிவ பூஜை
காலையிலேயே எழுந்து குளித்து முடித்து, மஞ்சள் நிற உடை அணிந்து கோயிலுக்கு கூட செல்ல தேவையில்லை, வீட்டிலேயே பூஜை அறையில் அமர்ந்து குரு காயத்ரி மந்திரத்தை மனதார உச்சரித்து வந்தால் போதும் தரித்திரங்கள், பீடைகள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும். கண் திருஷ்டிகள், பொல்லாத பொறாமை கொண்ட பார்வைகள் அனைத்தும் நம்மை விட்டு ஒழிந்து போகும். இதனால் இதுவரை பட்ட துன்பங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். மேலும் அறியாமல் செய்த பாவங்களில் இருந்தும் விமோசனம் கிடைத்து வரக் கூடியவை யாவும் நன்மையாகவே வந்தடையும். குரு ஹோரைக்கு இவ்வளவு சக்திகள் உண்டு. இதை பயன்படுத்தி பலன் பெறலாமே