பலரும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பொருளை சம்பாதித்தாலும் சம்பாதித்த பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாமல் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். அது தேவையான கடனாக இருந்தாலும் தேவையற்ற கடனாக இருந்தாலும் கடன் கடன் தான். அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டும் அந்த கடனிலிருந்து வெளியே வர முடியாமல் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு வாங்கிய கடனை அடைப்பதற்குரிய வழியே தெரியவில்லை என்று என்ற சூழ்நிலையிலும் இருப்பார்கள். இப்படி எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கடன் பிரச்சினை தீர்வதற்கு சிவபெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர சிவ பூஜை
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக நம் பூஜை செய்யும் பொழுது அந்த பூஜையின் பலனால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. ஒரு பிரச்சனை தீர்வதற்கு ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதத்தில் வழிபாடு செய்வோம். இதே போல் தான் கடன் பிரச்சினை தீர்வதற்கும் பல தெய்வங்கள் அருள் புரிகிறார்கள். அந்த வகையில் சிவபெருமானுக்கு எந்த பூஜை செய்தால் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாகவே சிவபெருமானை பிரதோஷ நாளில் வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அதேபோல் திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. அதனால் இந்த வழிபாட்டை நாம் திங்கட்கிழமை அன்று செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் சிவ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த சிவ வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு இலை எதுவென்றால் ஊமத்தம் இலை. 108 என்று எண்ணிக்கையில் இலையை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை அன்று காலையில் சிவபெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வெளி பிரகாரத்தில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு தான் இந்த பூஜையை செய்ய வேண்டும்.
முதலில் சிவலிங்கத்திற்கு தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு சுத்தமான பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். மறுபடியும் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்த பிறகு சிவலிங்கத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்களை சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஊமத்தம் இலைகளை ஒவ்வொன்றாக சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்வது போல் செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் ருண முக்தேஸ்வர மகாதேவாய நமஹ” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இப்படி இந்த மந்திரத்தை 108 முறை கூறி 108 இலைகளால் அர்ச்சனை செய்த பிறகு சிவபெருமானுக்கு வெள்ளை நிறத்திலான ஏதாவது ஒரு உணவு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு நிறைவு செய்ய வேண்டும். பிறகு அந்த நெய்வேத்தியத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். காலையில் வழிபாடு செய்ய இயலாது என்பவர்கள் மாலை நேரத்தில் பிரதோஷ நேரமான 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆனால் ஆலயத்திற்கு செல்வதற்கு முன்பாக சுத்தமாக குளித்து முடித்துவிட்டு தான் இந்த பூஜையை செய்ய வேண்டும். அன்றைய தினம் அசைவம் சாப்பிட்டு இருக்க கூடாது. மிகவும் சுத்தமாக இருந்து இந்த பூஜையை செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:சகல சௌபாக்கியம் பெருக சதுர்த்தி வழிபாடு
இந்த சிவ பூஜையை முழுமனதோடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்வதற்குரிய வழியை சிவபெருமான் அருள்வார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.