- Advertisement -
குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – கன்னி

கன்னி: (உத்திரம் 2, 3, 4 ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2 ஆம் பாதம்)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் இருந்து கொண்டு 9, 11, 1 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே சிம்ம ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது கடின உழைப்பு வெற்றி தரும் வாய்ப்பாக அமைய இருக்கிறது. குருவின் யோகத்தால் நல்ல கர்மவினை பயன்களை இந்த காலகட்டத்தில் நீங்கள் அனுபவிப்பீர்கள். உழைப்பால் உயர்ந்தவர்கள் என்கிற பேச்சுக்கு ஏற்ப உங்களுடைய உழைப்பும் உயர்வை நோக்கிய பயணத்தில் அமையும். எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு வெற்றி நடை போடுவீர்கள்.

- Advertisement -

உத்தியோகம் மற்றும் தொழில்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைத்தாலும், சக பணியாளர்களின் ஒற்றுமை குறைவாகவே இருக்கும். உத்தியோகத்தில் போட்டி, பொறாமைகள் வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை சாதக பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு முன்னேற்றத்தை காட்டிக் கொடுக்கும். எந்த வழியில் சென்றால் சரியாக இருக்கும் என்பது புலப்படும்.

Guru peyarchi palangal Kanni

பொருளாதாரம்:
பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பதற்கு சற்று சிரமப்பட நேரலாம். உற்றார், உறவினர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கும் என்றாலும் நண்பர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் நிதி பற்றாக்குறையால் கையை விட்டு போகும் நிலைமை ஏற்படலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. ஆடம்பர செலவுகளை திட்டமிடாமல் மேற்கொண்டால் கடன்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

குடும்ப வாழ்க்கை:
குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை விதண்டாவாதமாக பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். நீங்கள் ஒன்று சொன்னால் அதற்கு மாற்று கருத்து தான் பதிலுக்கு அவர்கள் கூறுவார்கள். இதனால் அடிக்கடி சிறுசிறு சலசலப்புகள் வந்து மறையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை குறைந்து கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு அதிகம் பொறுமையை கடைபிடிக்க வேண்டியதாக இருக்கும். உங்களுடைய முன் கோபத்தினால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தினால் நல்லது நடக்கும்.

Guru peyarchi palangal Kanni

ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்களுக்கு நன்றாகவே இருக்கும். சிறு சிறு தொந்தரவுகள் வந்தாலும் பெரிதாக ஒன்றும் பாதிப்புகள் இருக்காது. உடல் உஷ்ணம் காரணமாக உடலில் கட்டிகள் தோன்றி மறையலாம். எந்த விஷயத்தையும் சிறிதாக இருக்கும் பொழுதே பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்படியே வளரவிட்டால் ஆபத்தாக முடியலாம். ஆக மொத்தம் குரு பெயர்ச்சிக்கு பிறகு வருமுன் காப்பதே சிறந்ததாக இருக்கும்.

- Advertisement -

செய்ய வேண்டிய பரிகாரம்:
கன்னி ராசிக்காரர்கள் வருகின்ற குரு பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் வழிபாடு மற்றும் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். உங்கள் ராசிக்கு கோவிலில் கொண்டைக்கடலை தானம் செய்து வர மாற்றங்கள் நிகழும். குரு காயத்ரி மந்திரம் உச்சரிக்க மற்றும் மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சனை செய்ய வருகின்ற கஷ்டங்கள் யாவும் வந்த வழியே சென்று விடும். இல்லாதவர்களுக்கு நல்ல நாளில் மஞ்சள் வஸ்திர தானம் செய்யுங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – சிம்மம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -