- Advertisement -
- Advertisement -

குரு அருள் இல்லையேல், திரு அருள் இல்லை என்று சொல்லுவார்கள். குரு பகவானின் ஆசிர்வாதம் இருந்தால் தான் வாழ்க்கையில் அதி விரைவான முன்னேற்றம் இருக்கும். குரு அருள் இருந்தால் தான் இந்த கடவுளின் ஆசிர்வாதமும் இருக்கும். அதே போல நமக்கு பாடம் சொல்லித் தந்த குருவை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. ஆன்மீக ரீதியாக நம்மை வழி நடத்தும் குருவையும் மறக்க கூடாது.

குருவிற்கு நன்றி தெரிவிக்கக் கூடிய ஒரு நாள் என்றால் அது இந்த குருபூர்ணிமா. கோடி கோடி தோஷம் நம் ஜாதக கட்டத்தில், நம் பிறவியில் இருந்தாலும் அதை குருவால் மட்டுமே நீக்க முடியும். நாளை 10-7 -2025 குரு பூர்ணிமா வரவிருக்கிறது. வேதவியாசர் அவர்களின் பிறந்த நாளாக இந்த நாளை போற்றி கொண்டாடுகிறார்கள். குருவுக்கு நன்றி தெரிவிக்க இந்த குரூப் பூர்ணிமா நாள் மிக உகந்த நாளாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்துக்கள் மட்டுமல்ல ஜெயின் மதத்தினர், புத்த மதத்தினரும் இந்த குரு பூர்ணிமாவை விசேஷமாகக் கொண்டாடுவது வழக்கம். உங்களுடைய வாழ்க்கையில் தடைகளோ தடங்கல்களோ ஏற்படக்கூடாது. முன்னேற்றம் சீராக இருக்க வேண்டும் என்றால் நாளைய தினம் என்ன செய்ய வேண்டும். ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா.

ஆன்மீக ரீதியாக உங்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித் தரும் குருவுக்கு நாளை நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் பிறந்ததிலிருந்து உங்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்லக்கூடிய குருவிற்கு நீங்கள் வணக்கம் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் படித்த ஆசிரியர்களை தொலைபேசியின் மூலம் அழைத்து பேசி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஒரு ஆசிரியரை நேரில் சென்று பார்த்த அவருக்கு பாத பூஜை செய்தால் பெரிய பாக்கியம். யாரோ ஒருவர் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லி தருவதன் மூலமாகத்தான் இன்று நாம் வாழ்க்கையில் வளர்ச்சி அடைகின்றோம். நமக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து வாழ்க்கையில் நல்வழிப்படுத்தும் ஒவ்வொரு மனிதர்களுமே நமக்கு குருதான். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இப்போது இந்த நல்ல நிலைமையில் இருக்கிறீர்கள் என்றால் அதற்கு யார் காரணம் அந்த மனிதருக்கு நாளை நன்றி சொல்ல மறக்காதீர்கள் இது முதல் விஷயம்.

பிறகு ஆன்மீக ரீதியாக சித்தர்களை, சில பேர் குருவாக ஏற்றுக்கொண்டு, அவர்கள் பாதையில் நடப்பார்கள். சில பேர் சில, மகான்களை தங்களுடைய குருவாக ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்வார்கள். உதாரணத்திற்கு காஞ்சி மஹா பெரியவா, சாய்பாபா இவர்களையெல்லாம் கூட நிறைய பேர் குருவாக வழிபாடு செய்வது வழக்கம்.

- Advertisement -

இதுபோல குரு வழிபாடை நீங்கள் மேற்கொண்டால் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு முன்பு விளக்கு ஏற்றி, ஊதுவத்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். குரு பூர்ணிமா அன்று மகான்கள் வழிபாடும் சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய பேர் குருவை திட்டி பேசி இருக்கலாம். ஏதோ ஒரு சூழ்நிலையில் குருவுக்கு கெடுதல் நினைத்திருக்கலாம். நமக்கு குருவாக இருப்பவர்களை என்றுமே மனதை வருத்தப்படுத்தக் கூடாது. இது போல உங்களுடைய குரு மனதை நீங்கள் புண்படுத்தி இருந்தால் அதற்கான மன்னிப்பையும் நாளைய தினம் கேட்கலாம்.

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லுவார்கள். தெய்வத்திற்கு முன்பாக இருப்பது இந்த குரு தான். ஆகவே குருவை ன அவமதிக்காதீர்கள். அப்படி ஏதேனும் தவறு செய்திருந்தாலும் அதற்கான மன்னிப்பை நாளைய தினம் கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய தடையை விலக்க இந்த மன்னிப்பு, ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுக்கும்.

இது எதுவுமே செய்ய முடியவில்லையா. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குருபகவானை மனதார நினைத்து, இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குருவுக்கு கோடி நன்றிகளை தெரிவித்து விடுங்கள்.

குரு மந்திரம்

ஸ்ரீ குருப்யோ நமஹ !

“குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ”

இதையும் படிக்கலாமே: நாளை 10-07-2025 குரு வார பௌர்ணமி

இவ்வளவு தாங்க. இந்த மந்திரத்தை சொல்லி எல்லா இறைவனுக்கும் குருவுக்கும் ஆன்றோர்களுக்கும் சான்றோருக்கும் நன்றிகளை தெரிவித்து விடுங்கள். குரு பூர்ணிமா அன்று குருவின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைத்துவிடும். வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -